(இ
- ள்.) என்று கூற - என்று பறவைகளும் மிருகங்களும் கூற,
முனிவன் இயம்புவான் - விசுவாமித்திரன் சொல்லத்தொடங்கி, குன்று
மேவு விலங்கின் குலத்துளீர் - மலைவாழ் மிருகக்கூட்டத்தைச்
சார்ந்தவர்களே!, யான் இனி உமக்கு ஒன்று கூறுவது உண்டு - நான்
உங்களுக்கு இனிமேல் ஒன்று கூறவேண்டியது இருக்கிறது. இன்று நீர்
செய் பணி என்று இயம்புவான் - அஃது இன்றைக்கு நீங்கள்
செய்யவேண்டிய வேலை என்று முனி கூறுவானாயினான்.
இயம்புவான்
முன்னையது முற்றெச்சம் பின்னையது வினைமுற்று.
உள்ளீர் - உள்ளவர்களே! என உயர்வுப்பன்மையில் அழைத்தான். தனக்கு
வேண்டும் உதவிபுரியும்படி ஏவுகின்றவனாதலால்.
(42)
|
அரிச்சந்திரன்
நாட்டினை யழிக்க ஆணை தருதல் |
501. |
தாரின்
மன்னு புயத்தரிச் சந்திரன்
பாரின் மன்னுயிர் பைம்பொழில் தண்பயிர்
வேரி னோடும் களைந்து விரைந்துநீர்
வாரும் என்று மறைமுனி ஏவினான்.
|
(இ
- ள்.) தாரின் மன்னு புயத்து அரிச்சந்திரன் - பூமாலைகளை
அணிந்த தோள்களையுடைய அரிச்சந்திரனுடைய, பாரில் மன்னுயிர் பைம்
பொழில் தண் பயிர் - நாட்டிலுள்ள நிலைபெற்ற உயிர்கள், பசுமையான
சோலைகள் குளிர்ந்த பயிர்கள் முதலியவற்றை. நீர் - நீங்கள் போய்,
வேரினோடும் களைந்து - வேரோடு பிடுங்கி, விரைந்து வாரும் என்று -
விரைவில் வாருங்கள் என்று, மறை முனி ஏவினான் - வேதங்களில் வல்ல
விசுவாமித்திரன் கட்டளையிட்டான்.
மன்னுயிர்:
வினைத்தொகை ; பைம் பொழில் - பசுமை+பொழில்:
பண்புத்தொகை. 'அரிச்சந்திரன் நாட்டிலுள்ள உயிர், பயிர், பொழில்
முதலியவற்றை அழித்து வருக' என ஆணை தந்தான் முனிவன் என்பது.
(43)
|
விலங்குகளும்
பறவைகளும் கோசலநாடு புகுதல் |
502. |
அக்க
ணத்தில் இறைஞ்சி அருந்தவன்
பக்க நின்ற விலங்கும் பறவையும்
திக்க னைத்தும் செறிந்து விரைந்துபோய்
புக்க அத்திரு நாட்டின் புறத்தெலாம் |
(இ - ள்.)
அக் கணத்தில் - சொன்ன அப்பொழுதே, அருந்தவன்
இறைஞ்சி - பெருந்தவமுனிவனை வணங்கி, பக்கம் நின்ற விலங்கும்
பறவையும் - அவன் பக்கம் நின்ற மிருகங்களும் பறவைகளும், திக்கு
அனைத்தும் செறிந்து - எல்லாத் திசைகளிலும் நெருங்கி, விரைந்து
போய் - விரைந்து சென்று, அத் திருநாட்டின் புறத்து எலாம் - அந்த
அழகிய அயோத்தியா நாட்டின் வெளிப்பக்கங்களிலெல்லாம், புக்க -
புகுந்தன.
|