|
பன்றிகளின்
செயல் |
505. |
முழங்கு நீர்த்தட
முற்றும் உடைத்துநீர்
வழங்கு வண்டன் மடைகளும் தூர்த்துராய்த்
தழங்கு சாலியும் சாடித் தழைக்கொடிக்
கிழங்கு மாய்த்தன கேழற் றிறள்களே. |
(இ
- ள்.) கேழல் திரள்கள் - பன்றிக்கூட்டங்கள்,
முழுங்குநீர்த்தடம் முற்றும் உடைத்தும் - அலைகள் ஆரவாரிக்கின்ற நீர்
நிரம்பிய குளங்களின் கரைகளை உடைத்தும், நீர் வழங்கும் வண்டல்
மடைகளும் தூர்த்து உராய் - நீர் பாய்கின்ற சேறுநிரம்பிய மடைகளை
தூர்த்தும் உராவியம், தழங்கு சாலியும் சாடி - ஒலிக்கின்ற நெற்கதிர்க்
குலைகளைச் சாடியும், தழைக் கொடிக் கிழங்கு மாய்த்தன -
தழைகளையும் கொடிகளையும் கிழங்குகளையும் அழித்தன.
முழங்குநீர்:
வினைத்தொகை. நீர்த் தடம் : இரண்டன் உருபும் பயனும்
உடன்தொக்கதொகை. தழைக்கொடிக் கிழங்கு : உம்மைத்தொகை. சந்தம்
நோக்கி தழைக் கொடிக் கிழங்கு என மிகுந்து நின்றன. தழை, கொடி,
கிழங்கு எனப் பிரித்துப் பொருள் கொள்க. தூர்த்தல் - துளையின்றி
யடைத்தல், உராய்தல் - தேய்த்தல்.
(47)
|
கலைமான்
காட்டுப்பசுக்களின் செயல் |
506. |
காட்டு
வாழ்களை மான்கட மாமரை
நாட்டு வாழ்புனம் சேர நலிந்திட
வோட்டு வாரை ஒதுக்கினின் றேபரும்
கோட்டு வாரணம் குத்திப் பிளந்தவால். |
(இ - ள்.)
காட்டு வாழ் கலை மான் - காடுகளில் வாழ்கின்ற கலை
மான்களும், கட மா - காட்டுப் பசுக்களும், மரை - மரைகளும், நாட்டு
வாழ் புனம் சேர நலிந்திட - நாட்டிலேயுள்ள புனங்களை யெல்லாம் கூடி
அழித்திட, ஓட்டுவாரை - அவற்றை விரட்டவந்தவர்களை, ஒதுக்கில் நின்று
பரும் கோட்டு வாரணம் - மறைவில் நின்று பெரிய கொம்புகளையுடைய
யானைகள், குத்திப் பிளந்த - குத்திப்பிளந்தன.
கோடு + வாரணம் = கோட்டு வாரணம் என மெய்யிரட்டிற்று.
நெடிற்றொடர்க்குற்றியலுகரமாதலின். ஓட்டுவார்: வினையாலணையும் பெயர்;
ஆல்: அசை, மான் மரை முதலிய விலங்கினங்கள் பயிர் முதலியவை
யழிக்க அவற்றை யடித்தோட்டும் மக்களை யானைகள் கொம்பினாற்
குத்திக் கொன்றன என்க.
(48)
|
பாம்பு,
தேள், புலி, கரடிகளின் செயல் |
507. |
இரவு
காவல் இருப்பவர் யாரையும்
அரவும் தேளும் அரணையும் கொன்றவால்
கரவில் நின்று புலியும் கரடியும்
வரவ ரக்கொன்று மாக்களை மாய்த்தவே. |
|