(இ
- ள்.) இரவு காவல் இருப்பவர் யாரையும் - இராக்காலங்களில்
காவல்புரிகிறவர்கள் எல்லோரையும், அரவும் தேளும் அரணையும் கொன்ற
-பாம்புகளும் தேள்களும் பாம்பரணைகளும் கொன்றன, கரவில் நின்று -
மறைவிடங்களில் நின்று, புலியும் கரடியும் - புலிகளும் கரடிகளும்,
மக்களை வரவரக் கொன்று மாய்த்த - மனிதர்களை வரவரக் கொன்று
மறையும்படி செய்தன.
ஆல்:
அசை;
ஏகாரம் :
ஈற்றசை, மனிதர் நாளுக்குநாள் கொல்லப்பட்டு
மறைந்தனர் என்பது மாய்தல்-மறைதல். மாய்த்தல் - மறைத்தல் பிறவினை,
மாய்த்த - மறைவித்தன. மனிதர் இல்லாதவாறு செய்த எனக் கொள்க.
(49)
|
நெற்பயிர்ச்
சிதைவு |
508. |
மதம்த
ரும்கரி மான்மரை வல்லுளி
ததைந்த தாமரைத் தண்வய லிற்புகப்
புதைந்து சேற்றினிற் புக்கவும் வேரறச்
சிதைந்த வும்செழுஞ் செந்நெலும் வெண்ணெலும். |
(இ - ள்.)
மதம் தரும் கரி - மதம் பொழிகின்ற யானைகளும்,
மான் மரை வல்லுளி - கலைமான்களும் மரைமான்களும் பன்றிகளும்,
ததைந்த தாமரைத் தண் வயலில் புக - நெருங்கிய
தாமரைமலர்களையுடைய குளிர்ச்சிபொருந்திய வயலில் புகுதலால்,
செந்நெலும் வெண்ணெலும் - செந்நெற் பயிரும் வெண்ணெற் பயிரும்,
சேற்றினில் புதைந்து புக்கவும் - சேற்றுக்குள்ளே புதைந்து போனவையும்,
வேர் அறச் சிதைந்தவும் - வேர் அற்று அழிந்தவையும் ஆயின.
புக: செய எனும் வாய்பாட்டு வினையெச்சம்: புக்கவும்
சிதைந்தவும்:
பலவின்பால் வினையாலணையும் பெயர், புக்கவும், சிதைந்தவும் ஆயின
எனச் சொல் வருவித்து முடித்துக்கொள்க.
(50)
509. |
நெற்ப
சும்பயிர் பற்றி நிமிர்தன்மா
பொற்பின் மன்னர் புயவலி அற்ற நாள்
கற்பின் மாதர் கருங்குழல் பற்றிநீள்
வெற்பின் மாக்கள் விசித்திடல் போன்றவே. |
(இ
- ள்.) நெல் பசும் பயிர் பற்றி நிமிர்தல் - பசுமையான
நெற்பயிர்களை மிருகங்கள் பற்றி இழுத்துச்செல்லுதல், மா பொற்பின்
மன்னர் - சிறந்த அழகுடைய அரசர்கள், புயவலி அற்ற நாள் -
தோள்வலிமை குறைந்த நாட்களில், நீள் வெற்பின் மாக்கள் - உயர்ந்த
மலைநாட்டுக் குறவர்கள், கற்பின் மாதர் கருங்குழல் பற்றி -
அவ்வரசர்ளுடைய மனைவியராகிய கற்புடைய பெண்களின் கருநிறமான
கூந்தல்களைப் பிடித்து, விசித்திடல் போன்ற - இழுத்துச் செல்லுதல்
போன்றது.
பசும்
பயிர் - பசுமை+பயிர்: பண்புத்தொகை: நிமிர்தல், விசித்திடல்
போன்றது,
ஏகாரம் :
ஈற்றசை, ஒன்றன்பால் துவ் விகுதி தொக்கது. புய வலி:
ஆறாம்வேற்றுமைத்தொகை. கருங் குழல் : பண்புத்தொகை: வெற்பின்
|