பக்கம் எண் :


254

மாக்கள் - மலைநிலத்து வாழும் மக்கள், மறவர் குறவர், மங்கையர்
கூந்தலைப் பற்றியிழுத்துச் செல்வதுபோல விலங்குகள் நெற்பயிர்களைக்
கவி யிழுத்துச் சென்றன என உவமை கூறியிருத்தலால் இது உவமையணி.
                                                    (51)

   சிதைக்கும் விலங்குகளை யோட்டுவோரைச் சிங்கங் கொல்லுதல்
  
510. பண்டு போற்பழ னச்செழும் சாலியை
உண்டு போத உழக்கிய மாக்களைக்
கண்டு போய்க்கடி வோர்தமைக் கவ்வியே
கொண்டு போவன கோளரி யீட்டமே.

     (இ - ள்.) பண்டு போல் - முன்பு போல, பழனச் செழுஞ் சாலியை
- வயலிலுள்ள செழிப்பான நெற்பயிரை, உண்டு - தின்று. போக உழக்கிய
மாக்களை - மிகவும் மிதித்து அழித்த விலங்குகளை, கண்டு போய்க்
கடிவோர் தமை - பார்த்து விரைத்துபோய் விலக்குகிறவர்களை, கோள்
அரி ஈட்டம் - வலிமையுடைய சிங்கக்கூட்டங்கள், கவ்விக்கொண்டு
போவன - கவ்விக்கொண்டு போயின.

     பேரித: உரிச்சொல்; பழனச்சாலி : ஏழாம்வேற்றுமைத்தொகை:
செழுஞ்சாலி: பண்புத்தொகை. கடிவோர்: வினையாலணையும் பெயர்.

     ஏகாரம் : ஈற்றசை; ஈட்டம்: பால்பகா அஃறிணைப்பெயர். பண்டு
போல் - முன் செய்ததுபோலவே என்பது, சிங்கங்கள் முன் இவ்வாறு
மக்களைக் கொன்றன எனக் கூறியதைக் குறித்தது இது. ஒவ்வொரு நாளும்
சிங்கங்கள் இவ்வாறே மக்களைக் கொன்றன எனக் கொள்க.
                                                    (52)

 
  நாட்டு மக்கள் மன்னனிடம் வருதல்   
511. இந்த ஆறு நிகழ்ந்திட வேங்கியே
அந்த நாட்டில் அனைவரும் கூடினர்
வந்த யோத்தியின் மன்னனைப் போற்றித்தஞ்
சிந்த னைப்படர் செப்பத் தொடங்கினார்.

     (இ - ள்.) இந்த ஆறு நிகழ்ந்திட ஏங்கி - இவ்வாறு நடக்கக்
குடிகளெல்லாம் துக்கங்கொண்டு, அந்த நாட்டில் அனைவரும் கூடினார்
வந்து - அந்த அயோத்தி நாட்டிலுள்ள எல்லோரும் கூடிவந்து,
அயோத்தியின் மன்னனைப் போற்றி - அயோத்தி அரசனைத் துதித்து,
தம் சிந்தனைப்படர்செப்பத் தொடங்கினார் - தமது மனத்துயரத்தைச்
சொல்லத்தொடங்கினார்கள்.

     கூடினார்: முற்றெச்சம்; கூடி என்பது பொருள். கூடி வந்து எனக்
கொள்க. வந்து, போற்றி செப்பத் தொடங்கினார் என வினைமுடிவு செய்க.
                                                    (53)

 
  நாட்டில் விளைந்த கேட்டினை விளக்குதல்  
512. என்ன பாவம் இதற்குமுன் கண்டிலே
மன்னர் மன்ன வனத்து விலங்கினாற்
செந்நெல் கன்ன றினைப்புனம் தேம்பொழில்
இன்ன வெண்ணில விற்றன வின்றென்றார்.