பக்கம் எண் :


256

     நீரை : ஆகுபெயர்: வாரணம் : பால்பகா அஃறிணைப்பெயர்: மான்
மறை : உம்மைத்தொகை; மென் மயில்: பண்புத்தொகை,
பைங்கிளி-பசுமை+கிளி; இதுவுமது.

     ஏகாரம் : ஈற்றசை, மாய்த்தன - மறைவித்தன என்றும் பொருள்
கூறலாம். மறைவித்தன - இல்லாமற் செய்தன.
                                                    (56)

515. தின்று தின்று திரண்டபைங் கூழெலாம்
ஒன்றும் இன்றி உழக்கின ஓட்டவே
சென்றுசென்று செறிந்தவர் தங்களைக்
கொன்று கொன்று குவித்தன கோடியே.

     (இ - ள்.) திரண்ட பைங்கூழ் எலாம் - மிகுதியாயிருக்கின்ற
பசுமையான பயிர்களை எல்லாம், தின்று தின்று ஒன்றும் இன்றி உழக்கின
- இடைவிடாமல் தின்று ஒன்றுமில்லாமல் மிதித்து அழித்த மிருகங்களை,
ஓட்டவே - விரட்டுவதற்கு, சென்று சென்று செறிந்தவர் தங்களை -
போய்ப் போய் ஓட்டுவதற்குக் கூடினவர்களை, கொன்று கொன்று
குவித்தன கோடி - கொன்று கொன்று குவத்தவை எண்ணிலாதன.

     அடுக்குகள் : பன்மைமேலன: ஓட்டவே, கோடியே: ஏகாரங்கள்
அசை, உழக்கின : பலவின்பால் வினையாலணையும் பெயர்.
                                                    (57)

 
516. அரிய னந்தம் அரவு அனந்தம்வெம்
கரிய னந்தம் கரடிய னந்தமா
நரிய னந்த நலியனந் தம்கொடு
வரிய னந்த மலிந்தன வந்தென்றார்

     (இ - ள்.) அரி அனந்தம் - சிங்கங்கள் எண்ணிலாதன, அரவு
அனந்தம் - பாம்புகள் எண்ணிலாதன, வெம்கரி அனந்தம் -
கொடுமையான யானைகள் பல, கரடி அனந்தம் -கரடிகள் எண்ணிலாதன,
மா நரி அனந்தம் - பெரிய நரிகளும் எண்ணிலாதன, நவி அனந்தம் -
மான்கள் பல, கொடு வரி அனந்தம் - புலிகள் பல, வந்து மலிந்தன
என்றார் - வந்து நிறைந்தன எண்ணிலாதன என்று மக்கள் அரசனிடம்
சொன்னார்கள்.

     நவி: நவ்வி என்பதன் இடைக்குறை; நம் நாட்டில் எங்கிருந்தோ
வந்து வந்து மலிந்தன, காரணம் அறியோம் என்பது குறிப்பு.
                                                    (58)

517. மயிலும் கிள்ளையும் பூவையும் வாவலும்
குயிலும் காகமும் கூகையும் அன்றிலும்
மயிலும் காடையும் அன்னமும் என்றுபேர்
பயிலும் கூடப் பறவைய னந்தமே.

     (இ - ள்.) மயிலும் கிள்ளையும் பூவையும் வாவலும் குயிலும்
காகமும் கூகையும் அன்றிலும்-மயிலும் கிளியும் பூவையும் வௌவாலும்
குயிலும் காகமும் கூகையும் அன்றிலும், மயிலும் காடையும் அன்னமும் -
மயில்களும் காடைகளும் அன்னங்களும், என்றுபேர் பயிலும்.