என்று பெயர் கூறப்படும்,
பறவை அனந்தம் - பறவைகள் எண்ணிலாதன.
உம்மைகள்
எண்ணும்மைகள். ஈற்றது பெயரெச்ச விகுதி,
ஏகாரம் :
ஈற்றசை.
விலங்குகள்
அழிப்பதுமன்றிப் பறவைகளும்கூட அவற்றுடன்
சேர்ந்து அழிக்கின்றன என்க.
(59)
குடிகள்
தம் வருத்தம் நீக்குகவென மன்னனை வேண்டுதல்
518. |
நாற்றம்
ஏற்றுவந் தெம்மை நலிந்திடத்
தோற்றும் ஆகுலச் சூழ்வினை தன்னைநீ
மாற்றி டாயெனின் மன்னவ எங்களால்
ஆற்றொ ணாதென் றடிதொழு தேத்தினார். |
(இ
- ள்.) மன்னவ - அரசனே, நாற்றம் ஏற்று வந்து - மனித
நாற்றம் வீசுவதை யறிந்து வந்து, எம்மை நலிந்திட - எம்மைத் துன்புறுத்த,
தோற்றும் ஆகுலச் சூழ்வினை தன்னை - இப்பிறவியில் தோற்றும்
துன்பமாகிய சூழ்வினையை, நீ மாற்றிடாய் எனின் - நீ நீக்காது போனால்,
எங்களால் ஆற்றொணாது என்று - எங்களால் தாங்கமுடியாது என்று,
அடி தொழுது ஏத்தினார் - அரசன் திருவடிகளை வணங்கித் துதித்தார்கள்.
ஆற்ற ஒணா எனப் பெயரெச்சத்து அகரம் தொக்கது: ஒணா :
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மன்னவ : விளி. 'எங்கள் சூழ்வினை'
என்றது முற்பிறப்பில் நாங்கள் செய்த தீவினையால் இது வந்ததுபோலும்
என்பது கருத்து. 'ஆற்றொணாது' என்றது இறந்து படுவோம் எல்லாரும்
என்பதை விளக்கியது.
(60)
சிவபெருமான்புரி
திருவிளையாடல் போலும் இதுவெனச் சிந்தித்தல்
519. |
அங்கண்
மாநிலத் தன்னநன் னாட்டவர்
தங்கள் வாய்மொழி கேட்டரிச் சந்திரன்
றிங்கள் சூடி திருவிளை யாட்டினுக்
கெங்க ளாற்செய்வ தென்னென வெண்ணினான். |
(இ
- ள்.) அங் கண் மாநிலத்து அன்ன நன் னாட்டவர் தங்கள் -
அழகிய இடம் அகன்ற பேருலகில் அத்தகைய நல்ல நாட்டில் வாழ்கின்ற
நன்மக்களுடைய, வாய்மொழி கேட்டு - விண்ணப்பம் கேட்டு,
அரிச்சந்திரன் - அரிச்சந்திரன், திங்கள் சூடி திருவிளையாட்டினுக்கு -
சந்திரனை அணிந்த சிவபெருமானின் திருவிளையாட்டாகிய வினைப்பயன்
ஊட்டலுக்கு, எங்களால் செய்வது என் என எண்ணினான் - வலியற்ற
உயிர்களாகிய நாங்கள் என்னசெய்ய இயலும் எனக் கருதினான்.
சிவபெருமானே
உயிர்களுக்கு வினைப்பயனை எளிதாக ஊட்டுபவன்.
அதற்கு உயிர்கள் ஒன்றும் செய்ய இயலாது அனுபவித்துத்தான் பாவத்தை
நீக்கவேண்டும் என்பது மெய்கண்டநூற் கருத்து. அதனை அரிச்சந்திரன்
|