எனவும் கூறுவர். உழவர்கள்
மழைபெய்து பெருகிய வெள்ளத்தைக் கண்டு
மகிழ்ந்தனர் என்பது தோன்ற, "கள்ள லம்பிய வாயும்........உள்ளமும்
தோன்ற....வந்து மலிந்தனர்" என்றார்.
(29)
|
மள்ளர்
வெள்ளங் கண்டு மகிழ்ந்து
கரை
பேணுதல்
|
44. |
கொட்டு வாங்கிக்
குதித்து நிவப்புமண்
வெட்டு வார்சுமப் பார்மிதித் துக்கரை
கட்டு வார்வன் கடிப்பெடுத் துக்கிணை
தட்டு வார்துர கங்கொடு தாங்குவார். |
(இ - ள்.)
கொட்டு வாங்கிக் குதித்து நிவப்பு மண் வெட்டுவார் -
மண் வெட்டிகளைக் கையில் எடுத்து மகிழ்ச்சியால் குதித்து மேட்டிலுள்ள
மண்ணைச் சிலர் வெட்டுவார்கள், சுமப்பார் - வெட்டிய அந்த மண்ணைச்
சிலர் சுமப்பார்கள், மிதித்துக் கரை கட்டுவார் - கரையில் போட்டு
மிதித்துச் சிலர் கரை கட்டுவார்கள், வண் கடிப்பு எடுத்து கிணை
தட்டுவார் - சிலர் வலிதான தோற்பறையை எடுத்து மருதநிலப் பறையைக்
கொட்டுவார்கள், துரகம் கொடு தாங்குவார் - சிலர் குதிரை மரங்களைக்கொண்டு நிறுத்திக்
கரையைக் காப்பார்கள்.
துரகம் - குதிரை. இது, குதிரைபோல் உருவான மரத்தை
நிறுத்தித்
தண்ணீரை அடைக்குங் கருவியை யுணர்த்தியது. இதனைக் 'குதிரைத் தறி'
என்று கூறுவர். நிவப்பு - உயர்வு. வெட்டுவார், கரை கட்டுவார், தாங்குவார்
ஆகி மள்ளர் பலர் தம் தொழில் புரிந்தனர் என்று கொள்க.
(30)
|
உழவர்
உழும் ஓசை |
45. |
முழவெ ழும்படி
மொய்சிறை யிற்கறங்
கெழவெ ருண்டய லன்னம் இரிந்திடப்
பழவ ரம்பு புதுக்கிப் பகடுசேர்த்
துழவர் எங்கும் உழும்ஒலி ஓங்குமே. |
(இ - ள்.)
முழவு எழும்படி - மத்தளத்தின் ஒலிபோல
ஒலியெழும்படி, அயல் அன்னம் மொய் சிறையில் கறங்கு எழ வெருண்டு
இரிந்திட - அருகிலுள்ள அன்னப்பறவைகள் நெருங்கிய இரண்டு
சிறகுகளிலிருந்து சுழல்காற்றுத் தோன்றுமாறு பறந்து பயந்து ஓடிட, பழ
வரம்பு புதுக்கி - பழைய வரப்புகளை யுயர்த்தி மிதித்துப் புது வரப்பாக்கி,
பகடு சேர்த்து - எருமைகளை ஏரிலே பூட்டி, உழவர் உழும் ஒலி எங்கும்
ஓங்கும் - உழவர்கள் உழுகின்ற ஓசை எல்லா இடங்களிலும்
மிக்கொலிக்கும்.
அன்னங்கள் பயந்து சிறகுகளை முழுதும் விரித்துக்கொண்டு
வேகமாகப் பறந்தெழுதலின் சுழல் காற்றுத் தோன்றிற்று. படபட வென்று
சிறகுகளையடித்துப் பல வன்னங்கள் பறக்கும் ஒலி மத்தளந்
தட்டுவதுபோல இருந்ததெனக் கொள்க. முழவு - ஒலிக்காயிற்று :
ஆகுபெயர்.
(31)
|