46. |
வலம்பு ரித்திரள்
வால்வளை வெண்சலஞ்
சலம்பி ளப்பத் தரளம் பிளப்பவுற்
பலம்பி ளப்பப் பதுமம் பிளப்பமீன்
குலம்பி ளப்பக் கொழுச்செலும் சாலெலாம். |
(இ
- ள்.) வலம்புரித்
திரள் வால் வளை வெண் சலஞ்சலம்
பிளப்ப - வலம்புரிச் சங்கின் கூட்டங்களும் வெண்மையான சங்குகளும்
வெண்மையான சலஞ்சலமாகிய சங்குகளும் உடையும்படியாகவும், தரளம்
பிளப்ப - பலவிதமான முத்துகள் உடையும்படியாகவும், உற்பலம் பிளப்ப
- நீலோற்பலப் பூக்கள் சிதையும்படியாகவும், பதுமம் பிளப்ப -
தாமரைமலர்கள் சிதையும்படியாகவும், மீன் குலம் பிளப்ப - மீன் இனங்கள்
நசுங்கும்படியாகவும், சால் எலாம் கொழுச் செலும் - சால்களிலெல்லாம்
கலப்பைக் கொழுக்கள் ஆழ உழுது கொண்டு செல்லும்.
சொற்பொருட்
பின்வருநிலை அணி : சால் எலாம் : ஒருமைப்
பன்மை மயக்கம். செலும் : தொகுத்தல். வலம்புரி - வலப்புறமாக வளைந்த
வரிகளையுடையது. இடம்புரி - இடதுபுறமாக வளைந்த வரிகளையுடையது.
இடம்புரியினும் வலம்புரி சிறந்தது; வலம்புரியினும் சலஞ்சலஞ் சிறந்தது.
சலஞ்சலம் இருக்கும் வயல்களில் சங்குகளும் அவற்றில் உயர்ந்த வலம்புரி
சலஞ்சலங்களும், முத்துகளும் குவளை தாமரைகளும் மீன் கூட்டங்களும்
இருக்கும் என்பதும், உழும் போது கொழுநுனையிற் பட்டு இவை பிளந்து
சிதைபுற என்பதும் கூறினர். எனவே, நீர்வளஞ் சிறந்த நாடு என்பது
தோன்றும்.
(32)
|
பல
உழவர் பரம்படித்தல் |
47. |
இரும்பொ
டித்தன வேரடிக் கின்றகோல்
அரும்பொ டிப்பொடி யாக உரப்பிநீள்
கரும்பொ டித்துக் கடாவடித் தெங்கணும்
பரம்ப டிப்பவர் பற்பல கோடியே.
|
(இ
- ள்.) இரும்பு ஒடித்தன ஏர் அடிக்கின்ற கோல் அரும் பொடி
பொடியாக கடா உரப்பி - இரும்பை ஒடித்து ஏர்க்கோல் அமைத்தது
போல உறுதியான ஏர்க்கோலை வைத்து அது துண்டு துண்டாக ஒடிந்து
போகும்படி எருமைக்கடாக்களை அதட்டி அடித்து, நீள் கரும்பு ஒடித்து
அடித்து - நீண்ட கரும்புகளை ஒடித்து ஏர்க் கோலாகப் பிடித்து,
எங்கணும் பரம்பு அடிப்பவர் பற்பல கோடி - எல்லா இடங்களிலும்
பரம்பு அடிப்பவர்கள் எண்ணிக்கையற்றவர்கள்.
அன
: அன்ன என்ற உவம உருபின் தொகுத்தல். பரம்பு என்பது
நிலங்களை மேடு பள்ளங்களின்றிச் சமப்படுத்தும் ஒரு கருவி. உழுத பின்
பரம்படிப்பது வழக்கம். ஏரடிக்கின்ற கோல் "தாறுக் கம்பு" என்பர்.
இரும்புபோல உறுதியான கோல் என்று கூறுவார் 'இரும்பு ஒடித்தன
கோல்' என்றார். உரப்பி - அதட்டி, பேரொலி யெழுப்பி.
பொடிப்பொடியாக என்ற
|