குறிப்பினால் அடித்து
என்பது வருவிக்கப் பட்டது. பொடிப்பொடியாகக்
கோல் ஒடியும்படி உரப்பி அடித்து எனக் கொள்க. ஏரடிக்குங் கோல்
ஒடிந்தவுடன் கரும்பையொடித்துக் கடாவை யடிப்பர் எனக் கொள்க.
(33)
|
பரம்படியில்
அகப்பட்டு அழிந்த பொருள்கள் |
48. |
கரும்பும்
காவியும் கஞ்சமும் ஆம்பலும்
அரும்பும் சேம்பும் அலவனும் ஆமையும்
சுரும்பும் நந்தும் சுரிமுக மும்செழும்
பரம்பு தோறும் படிந்து நெரிந்தவே. |
(இ - ள்.)
கரும்பும்....................ஆம்பலும் - கரும்பும் குவளைப்
பூக்களும் தாமரையும் செவ்வாம்பற் பூக்களும், அரும்பும் சேம்பும் -
வயல்களில் முளைத்துள்ள நீர்ச்சேம்புகளும், அலவனும்............சுரிமுகமும்
- நண்டுகளும் ஆமைகளும் வண்டுகளும் நத்தைகளும் சங்குகளும்,
செழும் பரம்பு தோறும் படிந்து நெரிந்த - உறுதி மிகுந்த பரம்பு
மரங்களின் அடியில் எல்லாம் அகப்பட்டு அமிழ்ந்து அழிந்தன.
உழவர் பரம்புமரம் அடிக்கும்போது பயிர் வளர்ச்சிக்குக்
களையாயுள்ள இப் பொருள்கள் நசுங்கிச் சேறோடு ஒன்றாகி உரமாயின
என்பது. அரும்பும் சேம்பு : பெயரெச்சத்தொடர். தோறும் : முற்றும்மை.
ஏனைய எண்ணும்மைகள். அரும்பும் என்பதற்கு, காவி கஞ்சம் ஆம்பல்
இவற்றின் அரும்புகளும் என்றும் பொருள் கொள்ளலாம்.
(34)
|
வயல்
வளம் |
49. |
காலெ லாந்தர
ளத்திரள் மள்ளர்தம்
காலெ லாம்கம லக்கடி கார்க்கடா
மேலெ லாம்பொழி வேழத்தின் சாறதன்
வாலெ லாம்பல மாமலர் மன்றலே.
|
(இ
- ள்.) கால் எலாம்
தரளத் திரள் - கால்வாய்களிலெல்லாம்
முத்துக் குவியல்கள், மள்ளர்தம் கால் எலாம் கமலக் கடி -
பள்ளர்களுடைய கால்களில் எல்லாம் தாமரைப்பூவின் மணம், கார்க்கடா
மேல் எலாம் பொழி வேழத்தின் சாறு - கருமையான எருமைக்
கடாக்களின் மேலெல்லாம் கருப்பஞ்சாறு, அதன் வால் எலாம் பல
மாமலர் மன்றல் - எருமைக்கடாக்களின் வால்களில் எல்லாம் பல சிறந்த
நறுமலர்களின் மணம் இருந்தன.
பள்ளர்கள் உழும்போது அழுங்கிய
மலர்களின் பூந்தாதுகள், சேறு
நிறைந்த அவர்கள் கால்களிற் படியும். பூந்தாதுகள் கலந்த சேற்றிலும்
பூமணங் கமழும். கரும்பினை ஏர்க்கோலாக முறித்துப் பிடித்து
அடிக்கும்போது அதன் சாறு எருமைக்கடாக்களின் மேலெல்லாம் சிந்தி
வடியும். உழும்போது எருமைகளின் வால் அசையும். அப்பொழுது
கொழுவினால் சிதையுண்டு கிடக்கும் மலர்களில் வால் நுனி பொருந்த
|