பக்கம் எண் :


261

     ஓடினார் கூடினார்: முற்றெச்சங்கள்; சில + சிலர் - சிற்சிலர்,
கானகம் ஓடினார்கள், நாடினார்கள் எனவும், எங்கும் கூடினர்
துடிகொட்டினர் எனவும் கூட்டிப் பொருள் காண்க.
                                                     (5)

 
        கவிக் கூற்று  
526. அந்த வேலை அருஞ்சுரம் யாவினும்
கந்தன் மேவு குறிஞ்சித் தடத்தினும்
குந்தம் வேல்சிலை கூன்குணில் கொண்டவண்
வந்த வேடர் வரவு விளம்புவாம்.

     (இ - ள்.) அந்த வேலை - பறையொலி கேட்ட அப்போதே,
அருஞ் சுரம் யாவினும் - கடத்தற்கு அருமையான காடுகள் எங்கும்,
கந்தன் மேவு குறிஞ்சித் தடத்தினும் - முருகன் எழுந்தருளியிருக்கின்ற
மலைநாட்டிலும் (இருந்து), குந்தம்வேல் சிலை கூன் குணில் கொண்டு -
கையீட்டி வேலாயுதம் வில் வளைந்து குறுந்தடி இவற்றைக்கொண்டு,
அவண் வந்த வேடர் வரவு விளம்புவாம் - அங்கு வந்த வேடர்
வருகையைக் கூறுவாம்.

     விளம்புவாம் : எதிர்காலப்பன்மை வினைமுற்று, அருஞ்சுரம் :
பண்புத்தொகை. உம்மை எண்ணும்மை. இது கவிஞர் கூற்று, சுரம்
யாவினும் குறிஞ்சித் தடத்தினும் இருந்து வந்த வேடர் வரவு விளம்புவாம்
என்று கூட்டுக.
                                                     (6)

 
         வேடர்கள் வரவின் சிறப்பு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  
527. பீலிகட்டி யதன் மீதுமொய்த் தொளி
   பிறங்கு செட்டைகள் அணைத்துநீள்
மாலை யிட்டுவளர் குஞ்சி துஞ்சநெல்
   வரிந் திறுக்கிமலர் சூடியே
காலி னிற்றொடு செருப் பணிந்துகழல்
   கட்டி நீடுடி கறங்கவை
வேல்பிடித் துடலம் வேர்வ ரும்பிட
   விரைந்து வந்தன ரனந்தரே.

     (இ - ள்.) பீலி கட்டி - மயில் தோகையைக் கட்டிக்கொண்டு,
அதன்மீது - அதன்மேல், மொய்த்து ஒளி பிறங்கு செட்டைகள் அணைத்து
- நெருக்கமாக ஒளிவிளங்குகின்ற இறகுகலைச் சேர்த்து, நீள் மாலையிட்டு
- நீண்ட மாலையணிந்து, வளர் குஞ்சி துஞ்ச - வளர்ந்த குடுமிகளில்
தொங்கும்படி, நெல் வரிந்து இறுக்கி - குளநெற்கதிரை வரிந்து இறுகக்
கட்டிக்கொண்டு, மலர் சூடி - அதற்குமேல் பூ முடித்து, காலினில் தொடு