பக்கம் எண் :


262

தொடு செருப்பு அணிந்து - கால்களில் மாட்டிக் கொள்ளத்தக்க
செருப்புகளைப் போட்டு கழல் கட்டி - வீரக்கழல்களை அணிந்து, நீள்
துடி கறங்க - பெரிய துடிக்கருவி இசை ஒலிக்க, வை வேல் பிடித்து -
கூர்மையான வேலைப்பிடித்து, உடலம் வேர்வு அரும்பிட - உடலில்
வேர்வையுண்டாகும்படி, அனந்தர் - அநேகம் வேடர்கள், விரைந்து
வந்தனர் - விரைவாக வந்தார்கள்.

     வளர் குஞ்சி: வினைத்தொகை; உடலம் - அம்: சாரியை,

     ஏகாரம் : அசை, நெல்: ஆகுபெயர். மயில் தோகை மற்றும்
பறவைகளின் இறகுகள் நெற்கதிர் இவற்றை அணிகளாக அணிந்து
கொள்ளுதல் குறவர்கள் வேடர்களின் இயல்பாகும். விரைந்து
ஓடுதற்கேற்றதாகத் தொடு செருப்பணிந்தனர். நீள் + துடி - நீடுடி.
                                                     (7)

 
528.

கொலைஎ டுத்தசம னுறைவ தற்குரிய
   கூடெனத் தகைய தூணியிற்
கலைஎ டுத்தபிறை யனையமுத் தலைய
   கணைநி றைத்துவளர் மார்பினில்
மலைஅ டுத்தனைய புயமணைத் திறுக
   வார்வி சித்துவரு கார்எனச்
சிலைஎ டுத்துவிழி கனல்எழக் கடிது
   சென்ற வேடுவ ரனந்தரே.

     (இ - ள்.) கொலை எடுத்த - கொலைத்தொழிலை மேற்கொண்ட,
சமன் உறைவதற்குரிய - எமன் தங்குதற்கேற்ற, கூட எனத் தகைய
தூணியில் - கூடு என்று கூறத்தக்க அம்புப்புட்டியில், கலை எடுத்த பிறை
அனைய - கலைகளைக் கொண்ட பிறைச்சந்திரன் போன்ற, முத்தலைய -
மூன்று தலைகளை உடைய, கணை நிறைத்து - அம்புகளை நிறைத்து,
வளர் மார்பினில் - பரந்து அகன்ற மார்பில், மலை அடுத்து அனைய
புயம் அணைத்து - மலைகள் அணைந்தன போன்ற தோள்களில் அவ்
வம்பறாத்தூண்களைச் சேர்த்து, இறுக வார் விசித்து - இறுக்கமாக
வார்களினால் கட்டி, வரு கார் எனச் சிலை எடுத்து - மண்ணில் வந்த
மேகங்களைப்போல வில்லை எடுத்து, விழி கனல் எழ - கண்களில்
தீப்பொறி சிந்த, கடிது சென்ற வேடுவர் - விரைந்து வந்த வேடர்கள்,
அனந்தர் - பலராவார்.

     அம்புகள் கொல்வதற்கு ஏற்றவை என்பதை விளக்குவார் அவற்றை
எமனுக்கும் தூணியை எமன் உறையும் கூட்டிற்கும் ஒப்புமை கூறினார்.
அம்புகள் மூன்று கவரோடு பாதிச் சந்திரன் வடிவில் அமைந்திருந்தன.
வேடர்கள் நிறம் கறுப்பாகலின் அவர்கள் மேகம் போன்றனர். அவர்கள்
எடுத்த சிலை வானவில் போன்றது. வளர் மார்பு: வினைத்தொகை.

     ஏகாரம் : ஈற்றசை.
                                                     (8)

 
529. பணிலம் ஒத்தபல கறைநி ரைத்தபல
   கவசம் இட்டுவெகு துவசராய்
அணிமயிர்க் கரடி மதகரித் திரள்கள்
   புலிமுதற் கிரியி னளவவாய்க்
கணில்எதிர்த் தவைகள் கரவி லுற்றவைக
   டுணிபடக் கருவி எறியுமக்
குணில்எடுத் துலக நிறைய வந்தனர்கள்
   கோடி கோடிகொலை வேடரே.