(இ
- ள்.) அந்தரத்து இடி எனக் குரைத்து - வானத்தில்
உண்டாகும் இடி போலக் குரைத்து, முதிர் ஆழி போல் உறுமி - பெரிய
கடல்போல உறுமிக்கொண்டு, வார் தடம் கந்தரத்து இறுக நின்று உரப்பி
- கழுத்தில் கட்டிய வாரானது பெரிய கழுத்திலே இறுகும் படியாக நின்று
அதட்டி, இரு கால் மடக்கி - இரண்டு கால்களை மடக்கிக்கொண்டு, எதிர்
தாவி - முன்னே பாய்ந்து, தம் தமில் கறுவு கொண்டு - தங்கள் தங்களில்
வயிரங்கொண்டு, பல் பல தயங்க - பற்கள் பல விளங்கவும், வெம் கனல்
தடம் கணால் சிந்திட - வெப்பமான நெருப்பு பெரிய கண்களிலிருந்து
சிந்த, சருவி முன் கதித்து வருசெஞ் சுணங்கு - கிட்டி முன்னே
விரைவுடன் வருகின்ற செந்நிற நாய்கள், சதகோடி - அளவற்றன.
தடம்
கந்தரம் தடங்கண் : உரிச்சொற்றொடர்; குரைத்து, உறுமி,
உரப்பி, கால் மடக்கி. தாவியே, சருவி, கதித்து வரு செஞ் சுணங்கு எனக்
கூட்டுக. இதுவும் நாய்களின் இயற்கை கூறியது எனக் கொள்க.
(12)
|
பலவகை
நிறமுற்ற நாய் வரவு |
533. |
வெண்டை
யம்கவடி கண்டை வாரெழில்
விளங்கு வெம்கன களங்களும்
தண்டை கிண்கிணி சிலம்பு நின்றொலி
தழங்கிடும் கடிய தாள்களும்
துண்ட வெண்பிறை இரண்டு நின்றெதிர்
துளங்க வெட்டெயிறு மாகவே
மண்டலம் குழிய வந்த ஞாளிபல
வண்ண முள்ளசத கோடியே. |
(இ - ள்.)
வெண்டையம் கவடி - வெண்டயங்களும் பல
கறைகளும், கண்டை - பெரிய மணிகளும், வார் - தோல் வார்களும்,
எழில் விளங்கு வெம் கன களங்களும் - (ஆகிய இவைகள் கூடி
விளங்குகின்ற வெம்மையான பருத்த கழுத்துகளும், தண்டை கிண்கிணி
சிலம்பு நின்று ஒலி தழங்கிடும் - சதங்கைகளும் சிலம்புகளும் நிலைத்து
நின்று சத்தமிடும், கடிய தாள்களும் - கடினமான கால்களும், துண்டவெண்
பிறை - துண்டமான வெண்மையான பிறை நிலவு, இரண்டு நின்று எதிர்
துளங்க - இரண்டு முன் எதிராக நின்று விளங்குவன போல், வெட்டு
எயிறு ஆக - வெட்டுகின்ற பற்களும் உடையனவாக, மண் தலம் குழிய
வந்த பல வண்ணமுள்ள ஞாளி - தரைகள் குழிவிழும் படி விரைந்து வந்த
பன்னிற நாய்கள், சதகோடி - நூறுகோடிக் கணக்காகும்.
ஏகாரம் :
ஈற்றசை, சதம் - நூறு. களங்கள் - கழுத்துகள்,
களங்களும், தாள்களும், எயிறும் ஆக வந்த ஞாளி எனக் கூட்டுக.
உடையன ஆகச் சொல் வருவத்துக் கொள்க.
(13)
|