|
கரிய
நாய் வரவு |
534. |
வால்சு
ருண்டுநுனி வாய்வ ளர்ந்துதட
மார்ப கன்றிடை சிறுத்துவெந்
மேலு யர்ந்தணி சிரம்ப ருத்துநெடு
வீர வாளெயி றிலங்கிட
நாலு கின்றமணி ஆர மென்றுநெடு
நாநி மிர்ந்துதுளி தாழவே
கால்உ யர்ந்துகிர் விளர்த்து மொய்த்துவரு
கரிய நாய்கள்சத கோடியே. |
(இ
- ள்.) வால் சுருண்டு நுனி வாய் வளர்ந்து - வாலானது
சுருண்டு நுனி வாய் நீண்டு, தட மார்பு அகன்று - பெரிய மார்பானது
அகன்று, இடை சிறுத்து - இடையானது சிறுத்து, வெந் மேல் உயர்ந்து -
முதுகு மேலே உயர்ந்து, அணி சிரம் பருத்து - அழகிய தலை பருத்து,
நெடு வீர வாள் எயிறு இலங்கிட - நீண்ட வீரமும் ஒளியும் பொருந்திய
பற்கள் விளங்கிட, நாலுகின்ற மணி ஆரம் மென்று - தொங்குகின்ற மணி
மாலைகளைக் கடித்து மென்றுகொண்டு, நெடு நா நிமிர்ந்து துளி தாழ -
நீண்ட நாக்குகள் நிமிர்ந்து நீர்த்துளிகளைக் கீழே சொட்ட, கால் உயர்ந்து
- கால்கள் உயர்ந்து, உகிர் விளர்த்து - நகங்கள் வெளுத்து, மொய்த்து
வரு கரிய நாய்கள் சதகோடி - நெருங்கி வருகின்ற கருநிற நாய்கள்
நூறுகோடிக் கணக்காகும்.
ஏகாரங்கள்
: அசை.
வேட்டை
நாய்களின் இயற்கையை இக் கவி காட்டும்; வால்
சுருண்டிருத்தல், வாய் நீண்டிருப்பது, மார்பகன்றிருப்பது, இடை
சிறுத்திருப்பது, முதுகு மேலுயர்ந்திருப்பது, தலை பெரிதாக இருப்பது,
கால் உயர்ந்திருத்தல், நகம் வெளுத்திருத்தல் இவையெல்லாம்
வேட்டைநாய்க் கிலக்கணம் என உணர்க.
(14)
535. |
நிலைபெ
யர்ந்துலவு நீல மால்வரைகள்
நிகரெ னப்பிடரி னுகநிறீஇத்
தலையி றக்கி அகல் வாயில் வெண்ணுரை
தயங்க நாமுழம் இறங்கவே
அலைஎ ழும்சலதி ஒலிஎ னக்கதறி
அணிக ரும்பகடி ழுக்கநீள்
வளைக ளும்திரையும் வாரும் வன்கயிறும்
வந்த வன்சகட னந்தமே. |
(இ - ள்.)
நிலை பெயர்ந்து உலவு நீல மால் வரைகள் நிகரென -
தங்கள் நிலையைவிட்டுப் பெயர்ந்து சஞ்சரிக்கின்ற நீலநிறமான பெரிய
மலைகளுக்கு ஒப்பானது என்று சொல்லும்படி, பிடரின் நுகம் நிறீஇ -
பிடரியிலே நுகத்தடியினை நிறுத்தி, தலை இறக்கி - தலைகளைத்
தொங்கப்போட்டுக்கொண்டு, அகல் வாயில் வெண்ணுரை தயங்க -
அகன்ற
|