(இ
- ள்.) சிங்கம் ஆனை புலி பன்றி மான் மரை திரண்டு
அணைந்து - சிங்கங்களும் யானைகளும் புலிகளும் பன்றிகளும்
மான்களும் மரைகளும் திரண்டு கூடி, திரு நாடு எலாம் எங்கணும் பரவி
வந்து - அழகிய அயோத்திநாடு முழுதும் எல்லா இடங்களிலும் பரந்து
வந்து, தண் பயிர் யாவையும் கெட அழித்தலால் - குளிர்ச்சியான பயிர்
முழுதையும் நாசமாகும்படி அழித்தலால், அங்கு அவற்றை வதை
செய்வதற்கு - அம் மிருகங்களைக் கொல்வதற்கு, உமை அழைத்தனன் -
உங்களை அழைத்தேன், கடிது சென்ம் எனா - விரைந்து செல்லுங்கள்
என்று கூறி, உங்களுக்கு உதவியாக யாம் வருதலும் உண்டு என -
உங்களுக்குஉதவிபுரிய நானும் வருவேன் என்று, பல உணர்த்தினான் -
பலவகையான பணிகளை அவர்கள் உணருமாறு தெரிவித்தான்.
எண்ணும்மைகள் தொக்கன; நாடெலாம் : ஒருமை பன்மை மயக்கம்;
எலாம் : தொகுத்தல்; எங்கணும் : உம்மை முற்றும்மை; சென்ம் :
முன்னிலை ஏவற்பன்மை வினைமுற்று; மகரக் குறுக்கம். எனா : செய்யா
என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
'பயிரை
யழிக்கும் விலங்குகளைக் கொல்லவேண்டும்; அது குறித்து
உங்களை யாழைத்தேன்; நீங்கள்செல்லுங்கள்; நானும் உதவியாக
வருகிறேன்' என்றுமன்னன் கூறினான் என்பது.
(17)
538. |
முன்ன
டக்கஎன ஆடைஆ பரண
முற்றும் வேடுவர் தமக்களித்
தன்ன வர்க்குவிடை நல்கி மண்டப
மகன்று போனபின் அமைச்சரைச்
சென்னெ றிப்பட விரைந்து நீர்நமது
சேனை யோடினிது சென்மெனா
தன்ன கத்திடை புகுந்துகற் புடைய
தையல்வை கும்இடம் எய்தினான். |
(இ
- ள்..) வேடுவர் தமக்கு - வேடர்களுக்கு, ஆடை ஆபரணம்
முற்றும் அளித்து - உடைகள் நகைகள் எல்லாம் கொடுத்து, முன் நடக்க
என - முதலில் போங்கள் என்று, அன்னவர்க்கு விடை நல்கி -
அவர்களுக்கு விடை கொடுத்து, மண்டபம் அகன்று போன பின் - அவை
மண்டபத்தை விட்டு நீங்கிப்போன பிறகு, அமைச்சரைச் சென்னெறிப் பட
விரைந்து - அமைச்சர்களைச் செல்லவேண்டிய வழியிற் செலுத்த முற்பட்டு,
நீர் தமது சேனையோடு இனிது சென்ம் எனா - நீவிர் நம்முடைய
சேனையுடன் செவ்விய முறையிற் போவீராக என்று கூறிவிட்டுத், தன்
அகத்திடை புகுந்து - தனது மாளிகைக்குள்ளே புகுந்து, கற்புடைய தையல்
வைகும் இடம் எய்தினான் - கற்புடைய பெண்ணாகிய சந்திரமதி
இருக்கின்ற அந்தப்புரத்தை அடைந்தான்.
|