பக்கம் எண் :


269

செல் + நெறி = சென்னெறி; வேடர்கட்கு ஆடையணி கொடுத்து விடுத்து
அமைச்சரையும் செல்லுமாறு கூறிப் பின் தன் மனைபுகுந்து சந்திரமதியிடம்
வந்தான் அரசன் என்பது.
                                                    (18)

 
  அரிச்சந்திரன் வேட்டைக்கோலத் தாங்கிச்
சந்திரமதியுடன்
தேர் ஏறுதல்
  
939. கரிய காழகம் விரித்து டுத்துவரி
   கவசம் இட்டுமணி முடிதரித்
தரிய வெற்றிஉடை வாளயிற் கரிகை
   அரைஅ ழுத்திவயி ரவிதரும்
பெரிய பொற்சிலை எடுத்து வாளிபல
   பெய்த தூணிமுது கெய்தவே
தெரிவை யர்க்கரசி யுடன்வ ரக்கடிது
   சென்று தேரின்மிசை எறினான்.

     (இ - ள்.) கரிய காழகம்விரித்து உடுத்து - கறுப்பு நிறமுள்ள
ஆடையை விரித்து உடுத்தி, பரி கவசம் இட்டு - வரிந்து கட்டுகின்ற
சட்டையும் போட்டு, மணி முடி தரித்து - அழகிய கிரீடம்அணிந்து, அரிய
வெற்றி உடைவாள் - அருமையான வெற்றி தரும் உடைவாளும், அயில்
சுரிகை - கூர்மையான அரிவாளும், அரை அழுத்தி - அரையில் கட்டி,
வயிரவி தரும் பெரிய பொன் சிலை எடுத்து - காளியால் கொடுக்கப்பட்ட
பெரிய பொன்மயமான வில்லை எடுத்துக்கொண்டு, வாளி பல பெய்த
தூணி முதுகு எய்த - பல அம்புகள் போடப்பட்ட அம்பறாத்தூணியை
முதுகில் பொருந்தக் கட்டி, தெரிவையர்க்கு அரசியுடன் வரக் கடித்
சென்று தேரின் மிசை ஏறினான் - பெண்களுக்கு அரசியாகிய சந்திரமதி
யுடன்வர விரைந்து போய்த் தேரில் ஏறினான்.

     கரிய : குறிப்புப்பெயரெச்சம்; வாள் சுரிகை : உம்மைத்தொகை,
கடிது : வினையெச்சம். வேட்டைக்குச் செல்லுவதற்குரிய கோலம்
கொண்டான் அரிச்சந்திரன் மனைவி சந்திரமதியையும் உடன்கூட்டித்
தேரிலேறினான் என்பது.
                                                    (19)

 
540. கோளெ ழுந்தஎன வந்தெ ழுந்தன
   குடைதி ரட்கடை யுகத்தினில்
நாளெ ழுந்தகடல் போல எங்கணும்
   நடந்த மன்னவர் பெரும்படை
வாளெ ழுந்தசுட ரெண்டி சாமுகம்
   மறைத்த மாமுகி னெருக்கியே
தூறெ ழுந்தன கயங்கள் சென்றன
   துரங்க முந்துற நடந்தவே.

     (இ - ள்.) கோள் எழுந்தஎன - இரு கோள்களும் பல தோன்றி
எழுந்தன போல், குடைத்திரள் வந்து எழுந்தன - குடைக்கூட்டங்கள்