பக்கம் எண் :


270

தோன்றி உயரத்தில் எழுந்தன, கடையுகத்தின் நான் - ஊழிக்கால
முடிவு நாளில், எழுந்த கடல் போல - பொங்கி எழுந்த கடலைப்போல,
மன்னவர் பெரும் படை எங்கணும் நடந்த - அரசனுடைய பெரிய
சேனைகள் எல்லா இடங்களிலும் நடந்தன, வாள் எழுந்த சுடர் -
வாளாயுதத்தினின்று எழுந்த ஒளியானது, எண் திசாமுகம் மறைத்த -
எட்டுத் திக்குகளிலுள்ள இடங்களை எல்லாம் மறைத்தது, மா முகில்
நெருக்கித்துகள் எழுந்தன - பெரிய மேகங்களை நெருக்கிக்கொண்டு
சேனைத்தூசிகள் கிளம்பின, கயங்கள் சென்றன-யானைகள் சென்றன,
துரங்கம் முன்துற நடந்த - குதிரைகள் முன்னே நடந்தன.

     ஏகாரம் : ஈற்றசை; கடையுகம் : இலக்கணப்பொலி; திசை+முகம் -
திசாமுகம்; இது வடமொழி, திசை முகம் என்பது தமிழ், கோள் என்பது
சூரியன் சந்திரன் ஆகிய இருகோள்களையும் குறித்தது. மற்றைக்
கோள்கள் குடைக்கு உவமையாகா ஆதலின், இவ்விரண்டு கோள்களும்
பலவாக எங்கும் எழுந்தன போலத் தோன்றின குடைகளின் தோற்றம்
என்க.
                                                    (20)

  அரசன் சேனை வேடர் கூட்டத்தைச்
   
   சென்று சேர்தல்
  
541. கோட கம்தருவி லாழி யும்கரட
   குஞ்ச ரம்தருவி லாழயும்
ஆட கக்கவரி யும்செ றிந்துபகி
   ரண்ட கோளமும் மறைந்திட
மாடவீ திகள்க டந்து செம்பொன்மதில்
   வாயில் விட்டகல நண்ணியே
வேடர் சேனையோடு கூடி னானமுத
   வேலை மைக்கடலில் வீழ்தல்போல்.

     (இ - ள்.) கோடகம் தரு விலாழியும் - குதிரைகளின்
வாயிலிருந்து வரும் நுரையும், கரட குஞ்சரம் தரு விலாழியும் - மதம்
பொழிகின்ற யானைகளின் வாயிலிருந்து வருகிற நுரையும்,
ஆடகக்கவரியும் - பொற்காம்புள்ள சாமரங்களும், செறிந்து - நெருங்கி,
பகிரண்ட கோளமும் மறைந்திட - வெளியுலகும் மறைந்து போகும் படி,
மாட வீதிகள் கடந்து - மாடவீதிகளைக் கடந்துபோய், செம்பொன்
மதில் வாயில் விட்டு - செம்பொன்னிழைத்த கோட்டைவாயிலைக்
கடந்து, அகல நண்ணியே - வெகுதூரம் கடந்துபோய், அமுத வேலை
மைக் கடலில் வீழ்தல் போல் - பாற்கடலானது கருங்கடலில் போய்ச்
சேர்வது போல, வேடர் சேனையொடு கூடினான் - அரிச்சந்திரன்
கருநிறம்பொருந்திய வேடர் சேனையோடு போய்க் கலந்தான்.

     அரிச்சந்திரன் சேனையின் கொடி குடை சாமரங்களின் நிறம்
வெண்மை; யானை குதிரை இவற்றின் வாய் நுரையும் வெண்மை;
ஆகலின் பாற்கடற்கு உவமையாயிற்று. வேடர்களின் உடல் கருநிற
மாகலின் அவர்கள் சேனைக்குக் கருங்கடல் உவமையாயிற்று. பாற்கடல்
சென்று கருங்கடலில் கலந்தது போல இருந்தது என்க.
                                                    (21)