580. |
சேனை
யும்பெருந் தேர்களும் திண்பரித் திரளும்
யானை யும்கொடு முடுவலும் இறந்திட வெற்றிக்
கானெ லாம்பிணக் காடுசெய் தெய்திற்றுக் கண்டாய்
தேன லங்கலாய் தேரினைத் திரித்தருள் என்றான். |
(இ
- ள்.) தேன் அலங்கலாய் - தேன் சிந்துகின்ற மாலையணிந்த
மன்னனே, சேனையும் பெருந் தேர்களும் - சேனைகளும் பெரிய
தேர்களும், திண் பரித் திரளும் யானையும் - வலிமைவாய்ந்த
குதிரைகளும் யானையும், கொடு முடுவலும் இறந்திட எற்றி -
கொடுமையான நாய்களும் இறந்துபோகும்படி குத்திக்கொன்று,
கான்எலாம் பிணக்காடு செய்து எய்திற்று - காடு முழுவதையும்
பிணக்குவியலாகும்படி செய்து அவ்விடத்தை அடைந்தது, தேரினைத்
திரித்தருள் என்றான் - தேரினைப் பன்றி இருக்கும் திசை நோக்கித்
திருப்பி வருக என்றான்.
கண்டாய்
: முன்னிலை அசை.
அரசே
! யானை தேர் பரி ஆள் என்ற நால்வகைச் சேனைகளும்
நாய்களும் இறந்திடும்படி எற்றிப் பிணக்காடாக்கிவிட்டு வந்தது,
அதனைப் பார்க்க நீங்கள் தேரினைத் திருப்புக என்றான்.
(60)
|
பன்றியைக்
கொல்ல மன்னன் செல்லுதல்
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் |
581. |
என்று
பகர்ந்திட மன்னர் மன்னன் எழுந்த கதத்துடனே
நன்றிது நன்றென அங்கையொ டங்கை அறைந்து
நகைத்துடனே
இன்று மடிந்தவர் இன்னுயிர் தம்மிலும் எம்உயி
ரோவலிதென்(று)
அன்று சவுந்தரி தந்த நெடுஞ்சிலை அங்கை எடுத்தனனே. |
(இ - ள்.)
என்று பகர்ந்திட - என்று வேடன் ஒருவன்
கூறியவுடனே, மன்னவர் மன்னன் எழுந்த கதத்துடனே - பேரரசனாகிய
அரிச்சந்திரன் மிகுந்த கோபத்துடன், நன்றிது நன்றென - இது நன்று
நன்று என்று, அங்கை கொடு அங்கை அறைந்து - உள்ளங்கையால்
தட்டி, உடனே நகைத்து - உடனே கோபச்சிரிப்புச் சிரித்து, இன்று
மடிந்தவர் இன்னுயிர் தம்மிலும் என் உயிரோ வலிது என்று - இன்று
இறந்தவருடைய இனிய உயிரைக்காட்டிலும் எம்முடைய உயிரோவலிமை
உடையது என்று, அன்று சவுந்தரி தந்த நெடுஞ்சிலை அங்கை
எடுத்தனனே - முன்பு காளிதேவி கொடுத்த நீண்ட வில்லைக் கையில்
எடுத்தான்.
காளி கொடுத்த கடுஞ்சிலையைக் கையில் எடுத்துச்
சினத்துடன்
அரசன் சென்றனன். ஒரு பன்றி வந்து இவ்வாறு கொன்று குவித்தது
வியப்பானதென்று சிரித்தான்; கைகொட்டினான்; என்னுயிர் பெரிதோ
என்றுங் கூறினன்.
(61)
582. |
பாகரின்
மிக்கவ னான்மறை முற்றெதிர் பாகுகு றித்தவனும்
சாகர முற்றெழு பானு குலத்திறை தாளிணை யைத்தொழுதே
நாகரி கச்சுட ராடர வப்பணி நாயகி பொற்சடிலச்
சேகரி பத்திர காளி கொடுத்தரு டேரை நடத்தினனே. |
|