பக்கம் எண் :


291

ஒளிமிக்க சக்கரம் தரையைப் பள்ளமாக நெரித்தன ஆறு படப்பட
ஊறு புனல் - தேர் செல்லும் வழியில் ஊறுகின்ற நீர், திரை ஆழியை
ஒத்திட - அலையோடு கூடிய கடலைப்போல் பெருக்கெடுக்க, வீறு
படத்து உயர் கானம் அனைத்தையும் - பெருமை பொருந்திய
ஆதிசேடன் படத்தில் பொருந்தியுள்ள உயர்ந்த காடுகள்
எல்லாவற்றையும், வேரொடு எடுத்தன - வேரோடு பிடுங்கிக்கொண்டு
சென்றன.

     தேர்போல நின்ற மலைகளெல்லாம் தூசியாகும்படி அம் மலைகள்
மேல் ஏறிச்சென்றது தேர்; தேர்ச்சக்கரம் பதிந்தபோது ஊறிய நீர்
கடல்போலப் பெருகி மரங்களை வேரோடு பறித்துக்கொண்டோடிற்று.
                                                    (64)

 
585. தங்க முடித்தனி வெண்கவி கைத்திரி சங்கும கற்கெதிரே
திங்கள் எனத்தவ ளந்திகழ் முத்தொளி சிந்தும் மருப்பதனால்
வெங்கண் மதக்களி றும்பல விற்செரு வென்றப ரித்திரளும்
பங்க முறப்பல பஞ்சு படுத்திய பன்றிஎ திர்த்ததுவே.

     (இ - ள்.) தங்க முடிதனி வெண் கவிகை திரிசங்கு மகற்கு
எதிரே - தங்கத்தால் ஆகிய முடியையும் ஒப்பற்ற வெண் குடையையும்
உடைய திரிசங்கு என்னும் மன்னனுடைய மகனாகிய அரிச்சந்திரனுக்கு
எதிரே, திங்கள் எனத் தவளம் திகழ் முத்து ஒளி சிந்தும் மருப்பு
அதனால் - சந்திரனைப்போல் வெண்மை நிறமாக விளங்குகின்ற முத்தின்
ஒளியை வீசுகின்ற கொம்பினாலே, வெங் கண் மதக் களிறும் -
கொடுமையான கண்களையுடைய மதயானைகளையும், பல வில் செரு
வென்ற - பல வில் வீரர்களைப் போரிலே வென்ற, பரித் திரளும் -
குதிரைக் கூட்டங்களையும், பங்கம் உற பல பஞ்சு படுத்திய-அழியும் படி
பஞ்சுபோல் துன்பம் அடையும்படி செய்த, பன்றி எதிர்த்தது - பன்றி வந்து
எதிர்த்தது.

     அரிச்சந்திரன் இவ்வாறு தேர்மேலேறி விரைவாகச் சென்றபோது
அப் பன்றி எதிரே வந்தது.
                                                    (65)

 
586. வேயின் மிகுத்தெழு மால்வரை எட்டிலும் மீதுவி சைப்புறவே
பாயு முகிற்குலம் ஏழையும் அப்பொடு பாரில்வி ழச்சிதறும்
வாயி னுரைத்திசை நாலும்இ றைத்துயர் வானும்இ றைக்கும்
தீயின் மணித்திரை நீர்வட வைக்கனல் சேரஎ ரித்திடுமே.
   
                                       [விழித்

     (இ - ள்.) வேயின் மிகுத்து எழும் மால் வரை எட்டிலும் -
மூங்கில் மரங்கள் மிகுதிப்பட்டு வளர்ந்துள்ள பெரிய மலைகள் எட்டிலும்,
மீது விசைப்புறவே பாயும் - அவற்றின்மேல் வேகங்கொண்டு பாயும்,
முகில் குலம் ஏழையும் - மேகங்கள் ஏழையும், அப்பொடுபாரில் விழச்
சிதறும் - நீரோடு பூமியில் விழும்படி சிதறுவிக்கும், வாயில் நுரை திசை
நாலும் இறைத்து உயர் வானும் இறைக்கும் - தன் வாயிலிருந்து சிந்தும்
நுரையை நான்கு திசைகளிலும் சிதறி உயர்ந்த வானத்திலும் இறைக்கும்,
விழித்தீயின் - கண்களிலிருந்து தோன்றுகின்ற நெருப்பினால், மணித்
திரை நீர் - முத்துகளை