589. |
அனர்த்
தம்விளைக்க விடுத்தத வத்தன்அ ளித்தஉ
ரைப்படியே சினத்து வெறித்தும தக்கரி கற்கிதி டுக்கிட வுற்றணுகி
இனத்து ரகத்தரு ணக்கன கத்திர தத்தினை எற்றுகெனா
மனத்தி னினைத்துவ லத்தபு றத்தின்ம
ருப்பைஒ டுக்கியதே. |
(இ
- ள்.) அனர்த்தம் விளைக்க விடுத்த தவத்தன் அளித்த
உரைப்படியே கெடுதலைச்செய்யுமாறு தன்னை அனுப்பிய
தவமுனிவனாகிய விசுவாமித்திரன் கூறிய மொழியின்படி, சினத்து
வெறித்து - சினங்கொண்டு வெறிகொண்டு, மதக் கரி கற்கி திடுக்கிட
உற்று அணுகி - மதயானைகளும் குதிரைகளும் அஞ்சும்படி நெருங்கி,
இன துரகத்து அருண கனகத்து-கூட்டமான குதிரைபூண்ட சிவந்த
பொன்னால் ஆன, இரதத்தினை ஏற்றுக எனா - அரிச்சந்திரனுடைய
தேரை உடைத்து அழிக்கவேண்டுமென்று, மனத்தில் நினைத்து வலத்த
புறத்தின் மருப்பை ஒடுக்கியது - மனத்திலே நினைத்து வலப்புறத்துக்
கொம்பைச் சாய்த்துக்கொண்டு சென்றது.
எற்றுக
+ எனா + எற்றுகெனா, அகரம் மறைந்தது, இது
தொகுத்தல் விகாரம். கல்கி - கற்கி, குதிரை. கனகத் திரதம் - பொற்றேர்.
இஃது அரிச்சந்திரன் ஏறிவந்த தேரைக் குறிப்பாலுணர்த்தியது. எற்றுக
என்ற வியங்கோள் நான் எற்றுக எனத் தன்மை யொருமையில்வந்தது.
(69)
|
மன்னன்
பன்றியை எய்தல் |
590. |
உதித்த துணைப்பிறை
ஒத்தம ருப்பைஒ டுக்கஉ ணர்ச்சிபெறாக்
கதித்த பருத்தசி லைக்குள்அ டுத்தொர்க னற்கணை
தொட்டுவிட
எதிர்த்த கிருட்டியின் நெற்றியில் முற்றிஎ டுத்தக
லக்கொடுபோய்
விதிர்த்து டல்உட்கி வெருக்கொள மாருற்றெவெற்பிடை
[உய்த்ததுவே. |
(இ - ள்.)
உதித்த துணைப் பிறை ஒத்த மருப்பை ஒடுக்க -
பன்றி தோன்றிய இரண்டு பிறைகளைப் போன்ற கொம்புகளை
வலப்புறமாகச் சாய்த்துக்கொண்டு சென்றபோது, உணர்ச்சி பெறா -
அரிச்சந்திரன் அதன் குறிப்பை அறிந்து, கதித்த பருத்த சிலைக்குள்
அடுத்து ஓர் கனல் கணை தொட்டுவிட - உறுதியான பெரிய தன்
வில்லில் ஒரு நெருப்பைச் சிந்தும் அம்பினைத் தொடுத்து விட்டவுடன்,
எதிர்த்த கிருட்டியின் நெற்றியில் முற்றி - எதிர்த்து வந்த பன்றியின்
நெற்றியில் பட்டு, எடுத்து அகலக் கொடு போய் - அதனைத் தூக்கி
நெடுந்தொலைவில் கொண்டு சென்று, விதிர்த்து உடல் உட்கி
வெருக்கொள - நடுங்கி உடல் கூசி அஞ்சும்படி, மற்றொரு வெற்பிடை
உய்த்ததுவே - மற்ெறோரு மலையில் விழும்படி கொண்டுபோய் எறிந்தது.
துணைப்பிறை ஒத்த என்பது இல்பொருள் உவமை. உணர்ச்சி
பெறா
- அப் பன்றியின் அறிவைக் குறிப்பால் தான் கண்டு, தொட்ட கணை
பன்றியின் நெற்றியில் பட்டு அப் பன்றியை நெடுந்தூரங் கொண்டுபோய்
ஒரு மலையிற் சேர்த்தது என்க.
(70)
|