|
மன்னன்
கணையால் தாக்குண்டு பன்றி ஓடுதல் |
591. |
உய்த்தது
நீளிடை பத்துள யோசனை உற்றெழு மால்வரைமேல்
வைத்ததும் வாய்வழி கக்கிய சோரியில் வட்டணை யாஉழலா
மெய்த்தவன் வாழ்பொழி லுட்புக வோடலும் விட்டப தாதிஎலாம்
மொய்த்தன காவல னைப்புடை சூழ்தர முற்கிளர் வாரிதிபோல். |
(இ
- ள்.) உய்த்தது - அரிச்சந்திரன் செலுத்திய அம்பானது, நீள்
இடை பத்து உள யோசனை உற்று எழுமால் வரை மேல் வைத்ததும் -
நீளமும் அகலமும் பத்து யோசனை அளவு உள்ள உயர்ந்த பெரிய
மலையின்மேல் பன்றியைக் கொண்டுபோய்த் தள்ளியவுடன் வாய்வழி
கக்கிய சோரியில் வட்டணையா உழலா-வாய்வழியாகக் கக்கிய
இரத்தவெள்ளத்தோடு சக்கரம்போல் சுழன்று, மெய்த்தவன் வாழ்
பொழிலுட்புக ஓடலும் - விசுவாமித்திர முனிவன் வாழ்கின்ற
சோலையினுட்செல்ல ஓடியவுடன், விட்ட பதாதி எலாம் - முன் அஞ்சி
ஓடிய சேனைகள் எல்லாம், முன் கிளர் வாரிதிபோல் காவலனைப் புடை
சூழ்தர மொய்த்தன - முற்பட்டுப் பொங்கி எழுகின்ற கடல்போல
அரசனைச் சுற்றி வந்து நெருங்கின.
நெற்றியிற்
பட்ட அம்பால் நெடுந்தூரஞ் சென்று மலைமேல்
விழுந்து குருதி கக்கிச் சுழன்று கோசிகனிடம் சேர்ந்தது அப் பன்றி.
பன்றி ஓடியது கண்ட சேனைகளெல்லாம் அரசனிடம் வந்து சேர்ந்தன.
(71)
592. |
கடற்ப
டைசுற்றி இரைத்திறை பத்ம கழற்றுணை யைத்தொழலும்
தடக் கைஅமைத்து மனத்தி லலைத்தற விர்த்திர தத்தினைமுன்
நடத்தி எதிர்த்த கிருட்டிவ தைக்கந டுத்தனு வைத்துநிணக்
குடர்க்க டெறித்துவி றற்படை பட்டகொ லைக்களம்
உள்ளனனே.
|
(இ - ள்.)
கடற் படை சுற்றி இரைத்து இறை பத்ம கழல்
துணையைத் தொழலும் - கடல் போன்ற சேனைகள் அரசனைச் சுற்றிச்
சூழ்ந்துகொண்டு ஒலியெழுப்பி அவனுடைய தாமரை மலர் போன்ற
திருவடிகளை வணங்கியவுடன், தடக்கை அமைத்து மனத்தில் அலைத்தல்
தவிர்த்து - தன்னுடைய பெரிய கையினால் அமாத்திக் காட்டிச்
சேனைகளின் மனத்தில் உண்டான அச்சத்தையும் கலகத்தையும் நீக்கி,
இரதத்தினை முன் நடத்தி - தேரை முன்நோக்கிச் செலுத்தி, எதிர்த்த
கிருட்டி வதைக்க - எதிர்த்த பன்றியைக் கொல்வதற்காக, தனு நடு
வைத்து - வில்லின் நடுவில் கையை வைத்து, நிணக்குடர்கள் தெறித்து
விற்ற படைபட்ட கொலைக்களம் உற்றனன் - நிணமும் குடலும் சிதறி
வலிய சேனைகள் இறந்த கொலைக்களத்தை அடைந்தான்.
ஏ : ஈற்றசை.
அரசன் சேனைகளைக் கையமைத்துக் காட்டி அச்சந்தவிர்த்துப்
பின் தேரைச் செலுத்தி அப் பன்றியைக் கொல்வதற்குச் சென்றான் என்க.
கடற்படை : உவமத்தொகை. கடல் போன்ற படை என விரியும், கிருட்டி
- பன்றி.
(72)
|