597. |
முருகு
குடைந்தளி முரல மிகுந்தொனி முதலைக டந்தமின்வந்
தருகு செறுந்தொனி குடநிகர் வெள்வளை அகடுகளையும்
தொனிவெண்
குருகிரி யும்தொனி சிரல்கள் விழுந்தொனி கொடுவரி வந்துபுனற்
பருகும் இருந்தொனி பறவைக ளின்றொனி பகல்இர வும்தணியா. |
(இ
- ள்.) முருகு குடைந்து அளி முரல மிகும் தொனி -
தேனைக் குடைந்து உண்டு வண்டுகள் பாட மிகுகின்ற ஒலியும்,
முதலைகள் தந்தமில் வந்து அருகு செறும் தொனி - முதலைகள் தாமே
முன்வந்து பக்கங்களில் சீறிச் சண்டை செய்கின்ற ஒலி, குடம் நிகர் வெள்
வளை அகடு உளையும் தொனி - குடம்போன்ற வெண்சங்குகள்
கருப்பத்தினால் வயிறு வருந்தும் ஒலி, வெண் குருகு இரியும் தொனி -
வெண்மையான அன்னப்பறவைகள் ஓடுகின்ற ஒலி, சிரல்கள் விழும்
தொனி - மீன்கொத்திப் பறவைகள் மேன்மேல் விழுகின்ற ஒலியும், கொடு
வரி வந்து புனல் பருகும் இரும் தொனி - புலிகள் வந்து நீர் குடிக்கின்ற
பேரொலியும், பறவைகளின் தொனி - பல பறவைகளின் ஒலியும், பகல்
இரவும் தணியா - பகலும் இரவும் நீங்காதிருக்கின்றன.
இக் கவியில் தொனி என்ற சொல் பல இடங்களிலும் வந்து ஒலி
என்ற பொருளையே தருதலால் இது சொற்பொருட் பின்வருநிலையணி.
முன்னுள்ள கவியிலுள்ள ஒலிகளும், இக் கவியிலுள்ள ஒலிகளும் தணியா
என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்தன. இவ்விரண்டும் குளகம்
எனப்படும்.
(77)
598. |
அறத்த
வர்வற்க லையிற்று வர்நித்த மலர்ப்பொ ழில்பொற்பிரச
மறத்த களிற்றின் மதத்தி னொழுக்கு மடக்கி வரிப்பொழிபால்
நிறத்தி டுபச்சை மணித்து கிர்வச்சி ரநித்தி லமுட்கஞலக்
கறுத்த வெளுத்த சிவத்த பசுத்த கணிப்ப தெவர்க்கெளிதே. |
(இ - ள்.)
அறத்தவர் வற்கலையின் துவர் - துறவிகளின் காவி
ஆடைகளின் செந்நிறமும், நித்தம் மலர்ப்பொழில் பொன் பிரசம் -
நாள்தோறும் மலர்ச்சோலையிலிருந்து சிந்துகின்ற தேனின் பொன்னிறமும்,
மறத்த களிற்றின் மதத்தின் ஒழுக்கு - வீரம் பொருந்திய யானைகளின்
மதநீரோட்டத்தின் கரிய நிறமும், மடம் கவரி பொழி பால் - இளமையான
எருமைகள் பொழிகின்ற பாலும், நிறத்திடு பச்சை - மரகதம் என்னும்
பச்சைநிறக் கல்லும், மணி துகிர் - மாணிக்கமும் பவளமும், வச்சிரம்
நித்திலம் - வயிரமும் முத்தும், உள் கஞல - குளத்தினுள் இருந்து
ஒளிவீசுவதால், கறுத்த வெளுத்த சிவத்த பசுத்த கணப்பது எவர்க்கு
எளிது - அக் குளத்தின் நீர் கறுத்தது என்றும் அல்லது வெளுத்தது
சிவந்தது பசுமையானது என்றும் அறுதி இட்டுக் கூறுவது எவர்க்கு
எளிமையான செயல் ஆகும் (ஒருவராலும் துணிந்து கூறவியலாது.)
அவ் வாவியிலுள்ள நீரின் நிறம் கறுப்பா சிவப்பா
வெண்மையா
பசுமையா என்று ஆய்ந்து கூறுவது எவர்க்கும் அரிது என்பது
துவராடையின் செந்நிறம், பூந்தாதின் பொன்னிறம், யானைமதம் கருநிறம்
எருமைப்பால் வெண்ணிறம், சேர்ந்திருப்பதினாலும் பச்சை மணி, பவளம்,
வைரம் முத்து இவை நெருங்கிக் கிடப்பதனாலும் துணிந்து கூறவியலாது.
(78)
|