603. |
வரைஅடுத்
தரிய சோதி மணிகொழித் தருவி பாய்ந்த
விரைமலர்ப் பொழிலி னீழல் வெண்டிரை மேன்மேன் மோதி
நிரைநிரைத் தாளம் உந்தி நெடுநிலா விரிந்த வண்டல்
கரையினை மன்னன் சார்ந்தான் கடலினை அருக்கன்
சார்ந்தான்.
|
(இ
- ள்.) வரை அடுத்து - மலையை அடுத்து இருந்து, அரிய
சோதி மணி கொழித்து அருவி பாய்ந்த - சிறந்த ஒளிவீசுகின்ற முத்து
முதலிய மணிகளை அரித்துக்கொண்டு அருவிகள் பாய்ந்து ஓடி
வருகின்றன, விரைமலர்ப் பொழிலின் நீழல் - மணம் வீசும் மலர்
நிறைந்த சோலை நிழலில், வெண் திரை மேன்மேல் மோதி நிரை நிரை
தரளம் உந்தி - வெண்மையான அலைகள் மேலும் மேலும் மோதி
வரிசையாக முத்துகளைத் தள்ளிக்கொண்டு, நெடு நிலா விரிந்த வண்டல்
கரையினை - மிகுந்த நிலா ஒளிவீசுகின்ற வண்டல் படிந்த குளக்கரையை,
மன்னன் சார்ந்தான் - மன்னன் அடைந்தான், கடலினை அருக்கன்
சார்ந்தான் - அப்போது கதிரவனும் மேல்கடலை அடைந்தான்
(மறைந்தான்) என்க.
படைகளும்
அரிச்சந்திரனும் சந்திரமதியும் அவ் வாவிக் கரையை
யடைந்தபோது சூரியன் மறைந்து இரவாயிற்று என்பது.
(83)
|
மன்னன்
சோலையில் ஓர் இரவு தன் படையுடன் தங்குதல் |
604. |
யானையும்
தேரும் மாவும் இழிந்தொருங் கியாரும் ஈண்டித்
தேனைஒத் தினிய வாவிச் செழும்புனல் குடைந்துண் டாறிக்
கானைஉற் றிலங்கு தண்பூங் கடிபொழி லிடங்க டோறும்
சேனையும் மன்னர் தாமும் செல்வனும் இனிதி ருந்தார். |
(இ - ள்.)
யானையும் தேரும் மாவும் இழிந்து - யானை தேர்
குதிரை இவற்றினின்றும் இறங்கி, யாரும் ஒருங்கு ஈண்டி - சேனை வீரர்
முதலிய யாவரும் ஒன்றாகச் சேர்ந்து, தேனை ஒத்து இனிய வாவி செழும்
புனல் குடைந்து - தேன் போன்று இனிமையான குளத்து நீரில் குளித்து,
உண்டு ஆறி - உணவு உண்டு பசியும் இளைப்பும் ஆறி, கானை யுற்று
இலங்கு தண் பூ கடி பொழில் இடங்கள்தோறும் - காடுபோல் பெருகி
விளங்குகின்ற சோலையின் இடங்கள்தோறும், சேனையும் மன்னர் தாமும்
செல்வனும் இனிது இருந்தார் - சேனையும் குறுநில மன்னர்களும்
பேரரசனாகிய அரிச்சந்திரனும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.
அவ் வாவியில் நீராடி உணவுண்டு இளைப்பாறிச் சேனையும்
மன்னவனும் சந்திரமதியும் தங்கினர் என்பது.
(84)
|
முனிவர்
மன்னனுக்குக் கூறிய அறிவுரை |
605. |
தாபமும்
புனலும் கொள்வார் தாபதர் வந்து மாதர்
தீபமும் அயோத்தி வேந்தும் சேனையும் இருக்கக் கண்டு
கோபம்உற் றழன்று மன்னா கோசிகன் கண்டால்
உன்னைச்
சாபம்இட் டெரிப்ப னீண்டு சார்ந்தது தகாதே என்றார். |
|