(இ
- ள்.) தாபமும் புனலும் கொள்வார் தாபதர் வந்து - நீர்
வேட்கையுடன் நீர் முகக்க வந்த முனிவர்கள், மாதர் தீபமும் அயோத்தி
வேந்தும் - பெண்களிற் சிறந்த ஒளிபோன்ற சந்திரமதியும் அயோத்தி
மன்னனாகிய அரிச்சந்திரனும், சேனையும் இருக்கக் கண்டு - சேனையும்
அவ்விடத்தில் இருத்தலைக் கண்டு, மன்னா - மன்னனே, கோசிகன்
கண்டால் - கௌசிக முனிவன் உங்களைக் கண்டால், கோபம் உற்று
அழன்று - கோபங்கொண்டு கண்கள் சிவந்து, உன்னைச் சாபம் இட்டு
எரிப்பன் - உன்னைச் சாபம் இட்டு எரித்துவிடுவான், ஈண்டு சார்ந்தது
தகாதே என்றார் - இங்கு நீ வந்து தங்கியது தகாத செயல் என்றனர்.
அப்போது
தவமுனிவர் தாகத்திற்கு நீர் எடுக்க வந்தவர்கள்
அரிச்சந்திரனைக் கண்டு 'நீங்கள் இங்கு இருப்பது கண்டாற் கோசிகர்
சினந்து சாபமிடுவார்' என்று கூறினர்.
(85)
606. |
யாமவற்
கடிமை அன்றோ எம்வயிற் சீற்றம் என்னோ
யாமவற் கிழைத்த தீங்குண் டென்னினும் திருத்திப்
பின்னைப்
போமதே கருமம் என்னாப் புரவலன் புகலக் கேட்டீண்
டாமதே காண்டி என்னா அருந்தவர் அகன்று போனார். |
(இ - ள்.)
யாம் அவற்கு அடிமை அன்றோ - யாங்கள் கௌசிக
முனிவனுடைய அடிமயன்றோ, எம் வயின் சீற்றம் என்னோ - எம்
மிடத்தில் அவருக்கு ஏற்பட்ட கோபம் என்ன, யாம் அவற்கு இழைத்த
தீங்கு உண்டு என்னினும் - யாங்கள் அவனுக்குச் செய்த தீமை ஏதேனும்
இருப்பினும், திருத்தி - அவன் மனத்தை மாற்றி மகிமும்படி செய்து,
போமதே கருமம் என்னா - போவதே நற்செயல் என்று, புரவலன்
புகலக் கேட்டு - அரசன் கூறுவதைக் கேட்டு, ஈண்டு ஆமதே காண்டி
என்னா - இங்கு விளையப்போவதை நீ அறிந்துகொள் என்று கூறி,
அருந்தவர் அகன்று போனார் - அரிய தவத்தையுடைய முனிவர்
விலகிச் சென்றனர்.
அரசன் "நாங்கள் கோசிக முனிவற்கு அடிமையல்லாவோ?
அவன்
சினப்பதற்குக் காரணமில்லை, குற்றமிருப்பினும் பொறுக்குமாறு
வேண்டிக்கொள்வேன்" என்றான், முனிவர்களும் சென்றார்கள்.
(86)
607. |
மாதவர்
அகன்ற பின்னர் மாலைஅம் படாத்துள் நீங்கிப்
பூதலம் என்னும் மங்கை புதைஇருள் படாத்துட் புக்காள்
மேதகு தவத்தின் மிக்கோன் வினைப்பாடம் புகுது முன்னம்
தீதறு குணத்தின் மிக்கோன் சித்திரப் படாத்துட் புக்கான்.
|
(இ
- ள்.) மாதவர் அகன்ற பின்னர் - சிறந்த தவமுனிவர்
சென்ற பிறகு, பூதலம் என்னும் மங்கை மாலை அம் படாத்துள் நீங்கி -
பூமி தேவி என்னும் பெண் மாலைக்காலமாகிய போர்வையினின்றும்
நீங்கி, புதை இருள் படாத்துள் புக்காள் - மூடுகின்ற இருள் என்னும்
போர்வைக்குள் புகுந்தாள், மேதகு தவத்தின் மிக்கோன் வினைப்பாடம்
புகுதும் முன்னம் - மேன்மையுடைய தவத்திற் சிறந்த விசுவாமித்திர
முனிவன் தீவினையாகிய போர்வைக்குள் புகுவதற்கு முன்னால், தீது அறு
குணத்தின் மிக்கோன் சித்திரப்பாடத்துள் புக்கான் - குற்றமில்லாத
நற்குணங்களையுடைய அரிச்சந்திரன் ஓவியத்திறம் மிக்க போர்வையால்
மூடப்பெற்ற கூடாரத்துக்குள் புகுந்தான்.
|