பக்கம் எண் :


304

     (இ - ள்.) வையகம் எல்லாம் காக்கும் கொற்றவன் - நிலவுலக
முழுதும் காக்கின்ற மன்னவனாகிய அரிச்சந்திரன், அவர் கூறக் கேட்டு
- அமைச்சர் முதலானோர் கூறிய மொழிகளைக் கேட்டு, இன்று யான்
ஓர் கொடிய தீக்கனவு கண்டேன் - இன்று இரவு யான் ஒரு
கொடுமையான தீய கனவு கண்டேன், உற்ற அது கேட்டு மேல் வந்து
உறு திறம் உரைமின் என்னா - அக் கனாவில் நேர்ந்த நிகழ்ச்சியைக்
கேட்டுப் பின்பு எனக்கு வரக்கூடியவற்றை எடுத்துச் சொல்லுங்கள் என்று,
கல் தடம் தோளினார்க்கு கனா நிலை கூறல் உற்றான் - மலை போன்ற
தோள்களை உடைய அமைச்சர்க்குத் தான் கண்ட கனவின்
நிகழ்ச்சிகளைக் கூறினான்.

     வையகம் எல்லாம் காக்கும் மன்னவன் என்பது உயர்வுநவிற்சி.
தீமை + கனவு . தீக்கனவு : பண்புத்தொகை. உறு திறம் :
வினைத்தொகை. கனவிற் கண்டது வாழ்க்கையில் பயனளிப்பது உண்டு
என்னும் கொள்கை கனவு நூல் முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இக்
கனவினால் எனக்கு வரும் நன்மை தீமை யறிந்து கூறுக என்று முதலிற்
கூறிப் பின்னர்க் கனா நிகழ்ச்சி கூறுகின்றான் அரசன் என்பது.
                                                    (92)

 
  மன்னன் தான் கண்ட கனவினை அமைச்சரிடம் கூறுதல்   
613. என்னையீன் றெடுத்த தாதை யாக்கையோ டெய்தி உம்பர்
தன்னைஉற் றிமையோர் நீக்கத் தாரகைத் தலத் தமர்ந்த
பின்னையான் பிரசக் கூந்தற் பேதையர் ஐவர் தம்மை
முன்னைஊழ் விதியி னாலே முயக்கமுற் றினிதி ருந்தேன்.

     (இ - ள்.) என்னை ஈன்றெடுத்த தாதை - என்னைப் பெற்று
வளர்த்த தந்தை, யாக்கையோடு எய்தி உம்பர் தன்னை உற்று -
உடம்போடு போய்த் தேவருலகத்தை அடைந்து, இமையோர் நீக்க -
தேவர்கள் தள்ளிவிட, தாரகைத் தலத்து அமர்ந்த வின்னை - விண் மீன்
உலகத்தில் அமர்ந்த பிறகு, யான் முன்னை ஊழ் விதியினாலே - யான்
முன் பிறப்பில் செய்த வினைகளுக்கு ஏற்ற விதிப்படி, பிரசக் கூந்தல்
பேதையர் ஐவர் தம்மை - தேன் பொருந்திய மலரை யணிந்த கூந்தலை
உடைய பெண்கள் ஐவரை, முயக்கம் உற்று இனிது இருந்தேன் - கூடிக்
கலந்து மகிழ்ந்து இருந்தேன்.

     மன்னன் தன் மனைவியைத் தவிர வேறு மாதரை மணக்க
எண்ணாத விரதம் உடையவன் ஆதலால் மாதர் ஐவரைக் கூடியதாகக்
கண்ட கனவு தீக்கனவு ஆயிற்று. இராமன் சீதையை மணஞ்செய்த போது
'இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்று
கூறியது ஒப்பு நோக்கத்தக்கது.
                                                    (93)

 
614. அருத்தியிற் புணர்ந்த மாதர் ஐவரில் அருந்த வத்தோற்
கொருத்தியை யானே யீந்தேன் ஒருத்திபோ யவனோ டுற்றாள்
ஒருத்தியூ ணற்ற கன்றா ளொருத்திபோய்க் கண்ணி ழந்தான்
ஒருத்திவிட் டென்னை நிங்கா திருமைக்கு முறுதி தந்தாள்.