(இ
- ள்.) அருத்தியின் புணர்ந்த மாதர் ஐவரில் - நான்
விருப்பத்தோடு புணர்ந்த பெண்கள் ஐவரில், அருந்தவத்தோற்கு
ஒருத்தியை யானே ஈந்தேன் - அரிய தவமுனிவன் ஒருவனுக்கு ஒரு
பெண்ணை யானே விருப்பத்துடன் கொடுத்தேன், ஒருத்தி போய்
அவனோடு உற்றாள் - மற்றொருத்தி தானே சென்று அவனுடன்
சேர்ந்தாள், ஒருத்தி ஊண் அற்று அகன்றாள் - மற்றொருத்தி உணவு
இல்லாமல் விலகிச் சென்றாள், ஒருத்தி போய்க் கண் இழந்தாள் -
ஒருத்தி கண்களை இழந்து வருந்தினாள், ஒருத்தி என்னை விட்டு
நீங்காது இருமைக்கும் உறுதி தந்தாள் - ஒருத்தி என்னை விட்டு
நீங்காமல் துணையாயிருந்து இம்மை மறுமைக்கு வேண்டிய நன்மைகளைச்
செய்தாள்.
அரசன்
தான் கண்ட கனாவினை விளக்கினன். 'நான் ஐந்து
மாதரை மணந்தேன்; முனிவர்க்கு ஒருத்தியைக் கொடுத்தேன்;
மற்றொருத்தி தானே போய்ச் சேர்ந்தாள்; ஒருத்தி உணவில்லாமல்
நீங்கினாள்; ஒருத்தி கண்ணிழந்தாள்; ஒருத்தி என்னை விட்டு நீங்கா
திருந்தாள்; இதுதான் நான் கண்ட கனா' என்றான்.
(94)
615. |
இப்படி
இன்று கண்டேன் இக்கொடுங் கனவி னாலே
எப்படி விளைவ தோவஃ துணர்ந்திலேன் இயம்பும் என்னா
அப்படி அரசன் கூற அடியிணை தொழுது நன்னூற்
றப்பற உணர்ந்த கேள்விச் சத்திய கீர்த்தி சொல்வான்.
|
(இ
- ள்.) இப்படி இன்று கண்டேன் - இப்படி இன்று கனவு
கண்டேன், இக் கொடுங்கனவினாலே எப்படி விளைவதோ - இந்தக்
கொடிய கனவினால் எப்படிப்பட்ட தீமை விளையுமோ, அஃது
உணர்ந்திலேன் இயம்பும் என்னா - அதனை யான் அறியேன் நீங்கள்
கூறுங்கள் என்று, அப்படி அரசன் கூற - அப்படி அரசன் கூறியவுடன்,
நன்னூல் தப்பற உணர்ந்த கேள்வி சத்தியகீர்த்தி - நல்ல நூல்களைக்
குற்றமற அறிந்த கேள்வியறிவினையும் உடைய சத்தியகீர்த்தி என்பவன்,
அடியிணை தொழுது சொல்வான் - மன்னன் திருவடிகளை வணங்கிக்
கூறத் தொடங்கினான்.
கல்வியறிவோடு
கேள்வியறிவும் அமைச்சர்க்கு இன்றியமையாது
வேண்டும் என்பார், 'கேள்விச் சத்தியகீர்த்தி' என்றார். கொடுங்கனவு
என்றான் தான்மணந்த மனைவியரைப் பிறர்க்குக் கொடுத்ததும்
அவர்கள் தன்னை விட்டு ஓடியதும் கண்ணிழந்ததுமாகிய
தீயசெயல்களைக் கண்டதனால்தான்.
(95)
|
அமைச்சன்
கனவின் பயன் கூறுதல் |
616. |
அருவினை
விளைத்த தெல்லாம் கௌசிகன் அவனால் இன்னம்
வருவினை மிகவும் உண்டு வளநகர் நாடி ழந்து
திருவினை இழந்து சேயும் செவ்வியும் வேறு வேறாப்
பெருவினை முடிப்பான் தன்னைப் பின்னையாம் வெல்வோம்
என்றான்.
|
|