(இ
- ள்.) அருவினை விளைத்தது எல்லாம் கௌசிகன் - காட்டு
விலங்குகளை ஏவிவிட்டு நமக்குக் கொடிய செயல்களை உண்டாக்கியது
எல்லாம் கௌசிகனே ஆவான், அவனால் இன்னம் வருவினை மிகவும்
உண்டு - அவனால் இன்னும் வரக்கூடிய தீமைகள் மிகுதியாக உண்டு
வளநகர் நாடு இழந்து - வளமான நகரத்தையும் நாட்டையும் இழந்து,
திருவினை இழந்து - செல்வங்களை இழந்து, சேயும் செல்வியும் வேறு
வேறாய் - குழந்தையும் சந்திரமதியும் வேறு வேறாகும்படி, பெருவினை
முடிப்பான் - (முனிவன்) பெரிய தீவினைகளைச் செய்வான் பின்னை
யாம் வெல்வோம் என்றான் - பின்னர் யாமே வெற்றி பெறுவோம்
என்று அமைச்சன் கூறினான்.
'விசுவாமித்திரனால் இன்னும் பல தீமை விளையும் ஆயினும்
பின்னர் நாம் வெற்றி பெறுவோம்' என்று கனவினிகழ்ச்சிக்குப் பயன்
கூறினன் என்க.
(96)
|
நீதி
முறையே மன்னனைக் காக்கும் |
617. |
அனையவை
அமைச்சன் கூற அரசனை அரிவை போற்றி
எனைஇழந் தாலும் மன்னா வென்வயிற் றுதித்த மைந்தன்
றனைஇழந் தாலும் இந்தத் தலம்இழந் தாலும் வெம்போர்
முனைஇழந் தாலும் நீதி முறைஒன்று மிழவேல் என்றாள். |
(இ - ள்.)
அமைச்சன் அனையவை கூற - அமைச்சனாகிய
சத்தியகீர்த்தி மேற்கண்டவாறு கூறியவுடன், அரிவை அரசனை போற்றி
- சந்திரவதி மன்னனை வணங்கி, மன்னா எனை இழந்தாலும் -
மன்னனே! என்னை நீ இழக்கும் நிலை வந்தாலும், என் வயிற்று உதித்த
மைந்தன்தனை இழந்தாலும் - என் வயிற்றிற் பிறந்த மைந்தனை இழக்கும்
நிலை வந்தாலும், இந்தத் தலம் இழந்தாலும் - இந்த நாட்டை இழந்தாலும்,
வெம் போர் முனை இழந்தாலும் - போர் முனையிலே வெற்றி பெறும்
நிலையை இழந்தாலும், நிதி முறை ஒன்றும் இழவேல் என்றாள் -
நீதிமுறைமை மட்டும் இழக்காமல் காப்பாயாக என்றான்.
நீதிமுறையே மன்னனைக் காக்கும் ஆதலின் சந்திரவதி
அதனை
வலியுறுத்திக் கூறினாள்.
"இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்"
என்னும் திருக்குறள் ஒப்பு நோக்கத்தக்கது.
(97)
|
மன்னன்
அமைச்சரைத் தேற்றுதல் |
618. |
என்றலும்
அமைச்சர் எல்லாம் இருகண்நீர் அருவி பாய
நின்றுநின் றழுது வாடி நெட்டுயிர்ப் புற்ற காலை
மன்றலம் தெரியன் மார்பன் வருந்தனீர் என்று தேற்றி
அன்றவண் உறைந்தான் அப்பால் அடுத்தவா றெடுத்
துரைப்பாம்.
|
|