(இ
- ள்.) என்றலும் - இவ்வாறு சந்திரமதி கூறியவுடன்,
அமைச்சர் எல்லாம் இரு கண்ணீர் அருவி பாய - அமைச்சர்கள்
எல்லோரும் இரண்டு கண்களினின்றும் கண்ணீர் அருவி பொழிய,
நின்று நின்று அழுது வாடி - நின்று நின்று அழுது வருந்தி,
நெட்டுயிர்ப்பு உற்ற காலை - பெருமூச்சு விட்டபொழுது, மன்றல் அம்
தெரியல் மார்பன் - மணம் பொருந்திய அழகிய மலர்மாலை அணிந்த
மார்பினை உடைய மன்னன், வருந்தல் நீர் என்று தேற்றி - நீர் வருந்த
வேண்டா என்று தேறுதல் கூறி, அன்று அவண் உறைந்தான் - அன்று
அவ்விடத்தில் தங்கினான், அப்பால் அடுத்தவாறு எடுத்து உரைப்பாம் -
அப்பால் நிகழ்ந்த செய்திகளை இனிக் கூறுவோம்.
நின்று
நின்று : அடுக்குத்தொடர். வருந்தல் - அல் : ஈற்று
வியங்கோள் வினைமுற்று. தேறி : தன்வினை, தேற்றி : பிறவினை.
(98)
வேட்டஞ்செய்
காண்டம் முற்றிற்று
|