[கோசிகன்
பல சூழ்வினைகளை அரிச்சந்திரனுக்குப் புரிந்த
பகுதியைக் கூறுவது.]
|
அறுசீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம் |
619. |
வென்றிவேல்
மன்னன் விட்ட வெங்கணை தைத்த வாயால்
துன்றிய குருதி சோரக் சுழன்றுட றுடிது டித்துக்
குன்றினைக் கடந்து சென்று கோசிகன் தன்பாற் போந்து
பன்றியாய் வந்த மாயை பட்டபா டனைத்துஞ் சொல்லும். |
(இ - ள்.)
வென்றிமேல் மன்னன் விட்ட வெங்கணை தைத்து -
வெற்றி பொருந்திய வேலாயுதத்தையுடைய அரிச்சந்திர மன்னன்
செலுத்திய கொடிய அம்பு தைக்கப்பெற்று, வாயால் துன்றிய குருதி
சோர - மிகுந்த இரத்தம் வாயின்வழி ஒழுக, சுழன்று உடல் துடி
துடித்து - உடல் சுழன்று துடிதுடித்து வருந்தி, குன்றினைக் கடந்து
சென்று - தான் விழுந்த மலையைக் கடந்து அப்பாற்சென்று, கோசிகன்
தன்பால் போந்து - விசுவாமித்திர முனிவரிடம் சென்று, பன்றியாய் வந்த
மாயை - பன்றி வடிவத்தோடு வந்த அந்த மாயையானது, பட்ட பாடு
அனைத்தும் சொல்லும் - தான் பட்ட துன்பங்கள் எல்லாவற்றையும்
சொல்லத் தொடங்கியது.
வென்றி - வெற்றி : மெலித்தல் விகாரம். முனிவன்
தன் தவ
வலிமையால் மாயமாகப் படைத்த பன்றி ஆதலால் "பன்றியாய் வந்த
மாயை" என்றார். அரசன் விட்ட அம்புபட்டு வாயிற் குருதி வடிய வந்த
பன்றி தான் பட்டபாட்டைக் கூறத் தொடங்கியது.
(1)
620. |
என்னையா
ளுடையாய் உன்றன் ஏவலின் படியான் ஏகி
மன்னரும் கரியும் மாவும் சேனையும் மாளக் கொன்றேன்
பின்னவன் விட்ட அம்பால் சுழன்றியான் பிழைத்துப் போந்தேன்
உன்னரு ளுடையேற் கல்லால் உய்வுண்டோ என்ற தன்றே. |
(இ
- ள்.) என்னை ஆளுடையாய் - என்னை
அடிமையாகக்கொண்ட முனிவனே!, உன் தன் ஏவலின்படி யான் ஏகி
- யான் உன்னுடைய கட்டளையின்படி சென்று, மன்னரும் கரியும்
மாவும் சேனையும் மாளக் கொன்றேன் - மன்னர்களையும்
யானைகளையும் குதிரைகளையும் மற்றும் உள்ள சேனைகளையும்
அழியும்படிகொன்றேன், பின் அவன் விட்ட அம்பால் சுழன்று யான்
பிழைத்துப் போந்தேன் - பின்னர் அரிச்சந்திர மன்னன் செலுத்திய
அம்பினால் உடல் சுழன்று யான் தப்பிப்பிழைத்து இங்கு வந்தேன்,
உன் அருள் உடையேற்கல்லால் உய்வுண்டோ என்றது - உன்னுடைய
அருளைப்பெற்ற என்னால் அன்றி மற்றவரால் தப்பிப்பிழைக்க
முடியுமோ என்றது.
|