உவமை அணி. துறவிகளுக்குக்
காவியாடையும் மறையவர்க்கு
வெண்மையுடையும் வழங்குபவர்போல நிலத்துக்கேற்பச் செந்நெல்லும்
வெண்மை நெல்லும் விதைத்தார்கள் என உவமான உவமேயப் பொருத்தம்
காண்க. தானம் - ஏற்போர் தகுதி. 'தக்க தானம்' எனத் தானத்தின்மே
லேற்றப்பட்டது. நெலும் : தனிக்குறில் முன் வந்த ஒற்று உயிர் வரின்
இரட்டாமையின் தொகுத்தல் விகாரமாம். பலிப்பு - பலித்தல். இது பலம்
தருதல், பயன் தருதல் என்ற பொருள் தந்தது. இந்நெல்லை இந்நிலத்தில்
விதைத்தால் பயன் தரும் என்பதை யறிந்து என்பது பொருள்.
(38)
|
தேன்
பாய நாற்று வளர்தல் |
53. |
இறவு
பாய இருங்கத லிக்கனி
மறவி பாயவருக் கைக்கனி மாங்கனி
பிறவும் வாய்விண்டு பீறிப் பொழிந்திடு
நறவு பாய்ந்திட நாறு வளர்ந்தவே. |
(இ - ள்.)
இறவு பாய - தேன் கூடுகளிலுள்ள தேன் வழிந்து
பாய்தலினாலும், இருங் கதலிக் கனி மறவி பாய் - பெரிய வாழைப்
பழங்களிலிருந்து தேன் வழிந்து பாய்தலினாலும், வருக்கைக் கனி மாங்கனி
பிறவும் வாய் விண்டு பீறிப் பொழிந்திடு நறவு பாய்ந்திட - பலாப்பழம்
மாம்பழம் மற்றும் பழங்கள் வாய் வெடித்துப் பீறிட்டுப் பொழிகின்ற தேன்
பாய்தலினாலும், நாறு வளர்ந்த - நாற்றுகள் வளர்ந்தன.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நாற்றுக்கும் தேனுக்கும்
தொடர்பு
கற்பித்துத் தேன் பாய்ந்து வளர்கின்ற என உயர்த்துக் கூறினமையின்
தொடர்பு உயர்வு நவிற்சி அணி.
மறவி என்பது, மறதியைத் தரும் கள்ளுக்குரிய பெயர்.
அதனை
வருக்கைக் கனியின் சாறாக இப்பொருள் கூறப்பட்டது. மறவி பாய் என்ற
சொற்றொடர்க்கு மக்கள் மறதி பரவிய வருக்கைக்கனி எனக் கொண்டு
மக்கள் மறந்து விடப்பட்ட வருக்கைக்கனியின் சாறு எனக் கொள்வதே
சிறந்ததாம், அறிஞர் ஆய்ந்து கொள்க.
(39)
மதகுகளின் வழி நீரொழுக்குப் பெரும்பாம்புகள்
போன்றன
54. |
சேம்பு தோன்றுஞ்
செழுந்தடத் தின்கரைத்
தூம்பு தோன்றிய சோர்புனல் தோன்றுவ
காம்பு தோன்றுவ ரைப்புழைக் கட்பெரும்
பாம்பு தொன்றுவ போன்றன பாலெலாம். |
(இ
- ள்.) சேம்பு
தோன்றும் செழுந் தடத்தின் கரைத் தூம்பு
தோன்றிய பால் எலாம் சோர் புனல் தோன்றுவ - நீர்ச்சேம்புகள்
முளைத்துத் தோன்றுகிற பெரிய குளக்கரையிலுள்ள மதகின் துவாரங்களின்
வழியாகத் தோன்றி எல்லாப்பக்கங்களிலும் வழிகின்ற நீரினது தோற்றங்கள்,
காம்பு தோன்று வரைப் புழைக்கண் பெரும் பாம்பு தோன்றுவ போன்றன -
மூங்கில்கள் முளைத்து வளர்ந்து காணப்படுகிற மலையின் குகைகளிலிருந்து
|