பக்கம் எண் :


32

பெரிய பாம்புகள் வெளிவந்து தோன்றுவதைப் போன்றன.

     சேம்புக்கு மூங்கிலும் கரைக்கு மலையும் மதகின் துளைக்கு மலைக்
குகையும் நீர் ஒழுக்கிற்குப் பாம்புகளும் உவமையாகக் கொள்க. இச்
செய்யுள் உவமையணி.

     குகைக்குள்ளிருந்து பெரும் பாம்பு வெளிப்படுவதுபோல குளத்தின்
மதகுகளினின்று நீர் வெளிவந்தது என்பது.
                                                    (40)


  கடைசியர் குரவையொலி கடல் ஒலியை வென்றது
55. இரவை வென்ற விருண்ட செழுங்குழல்
அரவை வென்ற வகலணி யல்குல்வெங்
கரவை வென்ற கயற்கட் கடைசியர்
குரவை வென்ற குரைகட லார்ப்பையே.

     (இ - ள்.) இரவை வென்ற இருண்ட செழுங் குழல் - கருமையால்
இருளினை வென்ற கரிய அடர்ந்த கூந்தலையும், அரவை வென்ற அகல்
அணி அல்குல் - பாம்பின் படத்தினை வென்ற அகன்ற அழகிய
அல்குலையும், வெங் கரவை வென்ற கயல் கண் கடைசியர் - கடுமையான
களவு என்ற தொழிலில் வெற்றிபெற்ற கொண்டைமீன் போன்ற
கண்களையுமுடைய உழத்தியர்களின், குரவை குரை கடல் ஆர்ப்பை
வென்ற - குரவை ஒலிகள் ஒலிக்கின்ற கடலின் ஆரவாரத்தை வென்றன.

     'பையர வல்குல்' என்ற திருமுறைச் சொற்றொடர் காண்க. 'கயல்
மாண்ட கண்ணி' என்பது திருவாசகம்.

     "கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
      செம்பாகம் அன்று பெரிது"

என்ற திருக்குறள், தலைவன் நோக்காதபோது தலைவி நோக்குகின்ற
களவு நோக்கினை விளக்குவதாகும். குரவை - குலவை என்றும்
வழங்கும்.
                                                   (41)


உழத்தியர் தம் உறுப்பொத்த பூக்களைக்
   
 களைய
மனமின்றி மயங்கல்
56. செவ்வ ணந்திகழ் சீறடி மென்முகங்
கைவ்வ ணஞ்செழுந் தாமரை காவியின்
அவ்வ ணம்விழி வாய்அரக் காம்பன்மற்
றெவ்வ ணங்களை கொய்குவர் ஏழைமார்.

     (இ - ள்.) வணம் செழுந் தாமரை - அழகு மிகுந்த தாமரை மலர்,
செவ்வணம் திகழ் சீறடி - சிவந்த நிறம் விளங்குகின்ற சிறிய அடிகளையும்,
மென் முகம் - மென்மையான முகத்தையும், கை - கைகளையும் ஒத்திருக்கிறது, காவியின் அவ்வணம் - குவளை மலரின் அந்த நீலநிறமா
னது, விழி - கண்களை ஒத்திருக்கிறது, அரக்கு ஆம்பல் - செவ்வாம்பல்
பூ, வாய் - வாயினை ஒத்திருக்கிறது (ஆகையால்). ஏழைமார் -