பக்கம் எண் :


310

     விசுவாமித்திர முனிவருடைய மூச்சுக் காற்றில் தோன்றிய
அழகிய பெண்களின் சிறப்பு உவமைகள் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது.
அலைகடலில் நிலைத்த நீலக் கொடி, துவண்டு தள்ளாடும் தளர் நடை
மாதருடைய நிலைக்கு உவமை. இச் செய்யுளில் உவமை அணி
வந்துள்ளது.
                                                     (4)

 
623. செந்திரு அமுதில் தோன்றத் திரைக்கடல் பிறந்த நஞ்சில்
வந்திரு கருந் திருக்கள் வயங்குவ தென்ன நீலச்
சந்திரா தித்தர் என்னத் தலையின்மின் கறுத்த தென்ன
இந்திர நீலக் கொம்பர் இரண்டுவந் தெழுந்த தென்ன.

     (இ - ள்.) செந்திரு அமுதில் தோன்ற - சிவந்த இலக்குமி
என்னும் திருமகள் அமுதத்தின் தோன்றியதனால், திரைக் கடல் பிறந்த
நஞ்சில் - அலைகடலிற் பிறந்த நஞ்சினிடத்து, வந்து இரு கரும்
திருக்கள் வயங்குவது என்ன - இரண்டு கரிய திருமகளிர் வந்து பிறந்து
விளங்குவது போலவும், நீல சந்திர ஆதித்தர் என்ன - நீல நிறமான
சந்திரனைப் போலவும் நீல நிறமான கதிரவனைப் போலவும், தலையின்
மின் கறுத்தது என்ன - வானத்தில் உள்ள மின்னல் கறுத்து வந்தது
போலவும், இந்திர நீலக் கொம்பர் இரண்டு வந்து இறுத்தது என்ன -
இந்திரநீலக் கொம்புகள் இரண்டு வந்து தோன்றினாற் போலவும்;

     இச் செய்யுள் பொருள் முடிவுபெறாமல் எச்சமாக உள்ளது.
இங்ஙனம் எச்சமாகி நின்ற செய்யுள் வேறு அடுத்துள்ள செய்யுளில்
பொருள் முற்றுப்பெறும். இங்ஙனம் வரும் செய்யுள் குளகம் எனப்படும்.
இச் செய்யுளில் இல்பொருள் உவமைகள் வந்துள்ளன. ஆதலால் இது
இல்பொருள் உவமை அணியின்பாற்படும். நஞ்சில் பிறந்த இரு
கருந்திருக்களும், நீலச் சந்திராதித்தரும். கறுத்த மின்னல்
இல்பொருள்கள். சந்திர + ஆதித்தர் + சந்திராதித்தர். தலை என்பது
இங்கு வானத்தை உணர்த்தியது. என்ன என்பது உவமையுருபு.
இவ்வுவமையுருபு ஆகிய வினையெச்சங்கள் அடுக்கி "நாவியும்" (9) என்ற
கவியின் இறுதியிலுள்ள "நின்றார்" என்ற வினைமுற்றைக் கொண்டு
முடியும் என அறிக.
                                                     (5)

 
624. நீலவா ரிதியில் நீலத் துகிர்க்கொடி நின்ற தென்னக்
கூலவா ரிதியில் நீலக் கொம்பிரண் டெழுந்த தென்னப்
பாலவா ரிதிக டைந்த பஃறலை யரவங் கான்ற
ஆலவா ரிதியில் மூழ்கிக் கிளர்ந்தெழும் அன்னம் என்ன.

     (இ - ள்.) நீல வாரிதியில் நீலத் துகிர்கொடி நின்றது என்ன.
நீலநிறக் கடலில் நீலநிறமான பவளக்கொடி நின்றது போலவும், கூலம்
வாரிதியில் நீலக் கொம்பு இரண்டு எழுந்தது என்ன - கரையினை
யுடைய கடலினிடத்து நீலநிறமான இரண்டு பூங்கொம்புகள் தோன்றியது
போலவும், பால வாரிதி கடைந்த பல் தலை அரவம் கான்ற
பாலையுடைய கடலைக் கடைவதற்கு உதவிபுரிந்த பல தலைகளையுடைய
பாம்பு கக்கின, ஆலம் வாரிதியில்