பக்கம் எண் :


311

மூழ்கிக் கிளர்ந்து எழும் அன்னம் என்ன - நஞ்சு ஆகிய கடலில்
மூழ்கிய அந்த நஞ்சின் கருநிறத்தைப் பெற்று எழுகின்ற அன்னப்
பறவைகள் போலவும், நின்றார் (கவி. 9) எனக் கூட்டுக.

     பல் + தலை + அரவம் = பஃறலை யரவம் பாற்கடல் கடையப்
பயன்பட்ட பாம்பு வாசுகி என்னும் பெயர் உடையது. ஆதிசேடன்
என்றும் கூறுவர். கூலம் - நிர்க்கரை. இச் செய்யுளிலும் இல் பொருள்
உவமை அணிகள் வந்துள்ளன. இச் செய்யுளும் குளகம். பால் + அ +
பால; 'பாலவாரிதி' என வந்தது, பால என்ற குறிப்பு வினைமுற்று
பெயரெச்சப் பொருளைத் தந்தது.
                                                     (6)

 
625. ஆலத்தில் பயின்ற கண்டன் அழற்றிருக் கண்ணால் மாண்ட
காலத்தில் புறங்கொ டாது காமனோ டொத்த லைந்து
நீலத்திற் கருகி வெம்பி நினைவில்வந் துதவி அன்பாய்ச்
சீலத்தில் உயர்ந்த காமன் சேனையில் இருவர் என்ன.

     (இ - ள்.) ஆலத்தில் பயின்ற கண்டன் அழல்திருக் கண்ணால்
மாண்ட காலத்தில் - நஞ்சு பொருந்திய கழுத்தினை உடைய
சிவபெருமானுடைய அழகிய நெருப்புக் கண்ணினால் மன்மதன் எரிந்து
இறந்த காலத்தில், புறம் கொடாது காமனோடு ஒத்து அலைந்து
முதுகுகாட்டி ஓடாமல் அம் மன்மதனுடைய ஒத்துழைத்து அலைந்து -
நீலத்தின் கருகி - நீலநிறமாகக் (அச் சிவபெருமானுடைய நெற்றிக் கண்
நெருப்பால் வெந்து) கருகி, வெம்பி - வெம்புதல் அடைந்து, நினைவில்
வந்து உதவி - மன்மதன் நினைத்தபோது வந்து உதவி செய்து.
அன்பாய் - அன்பு உடையவராய், சீலத்தில் உயர்ந்த காமன் சேனையில்
இருவர் என்ன - கலவி ஒழுக்கத்தில் சிறந்த மன்மதனுடைய சேனையில்
இருக்கும் இருவரைப்போலவும், நின்றார் (கவி. 9) என்க.

     மன்மதனுக்குரிய படைகள் மாதர்கள் ஆதலால் அச் சேனைகளில்
இருவர் தப்பிப்பிழைத்து மறைந்து திரிந்து இப்போது வந்தவர் போலத்
தோன்றியது என்றார். உருவமின்றி யலைந்து திரியும் காமனுடன்
இவர்களும் அலைந்து திரிந்தனர் என்பது தோன்ற "காமனோ டொத்து"
என்றார்.
                                                     (7)

 
626. சுழிகொளும் பெருந்தண் கங்கை சூடினோன் துளங்கு நெற்றி
விழிகொளுந் தழலான் மேனி வெந்தழிந் திறந்த காமன்
பழிகொளக் கருதிக் கால பாசமே விழியாக் கொண்டு
அழிவிலா வரங்கள் கொண்ட ரதியும்மாற் றவளும் என்ன

     (இ - ள்.) சுழி கொளும் பெருந் தண் கங்கை சூடினோன் -
சுழிகளைக்கொண்ட பெரிய கங்கையாற்றைத் தலையில் சூடியுள்ள சிவ
பெருமானுடைய, துளங்கும் நெற்றி விழி கொளும் தழலால் மேனி வெந்து
- விளங்குகின்ற நெற்றிக்கண்ணில் உண்டான நெருப்பினால் உடல்
வெந்து, அழிந்து இறந்த காமன் - அழிந்து இறந்துபோன மன்மதன்,
பழி கொளக்