பக்கம் எண் :


312

கருதி - சிவபெருமானால் தம் கணவருக்கு ஏற்பட்ட பழியைத்
தீர்த்துக்கொள்ள நினைத்து, கால் பாசமே விழியாக் கொண்டு அழிவு
இலா வரங்கள் கொண்ட இரதியும் மாற்றவளும் என்ன -
காலபாசத்தையே கண்களாகக்கொண்டு அழியாத வரங்களைப்பெற்று
வந்த இரதியும் அவளுடைய மாற்றாளும் போலவும், நின்றார் (கவி. 9)
என்க.

     இச் செய்யுளும் குளகம். காலன் + பாசம் = காலபாசம்; எமன்
பாசம் என்னும் கயிற்றை வீசி உலகில் உள்ள உயிர்களைக் கவர்வது
போல, இப் பெண்கள் தம் கண்களை வீசி ஆடவர் உள்ளமும் உயிரும்
கவரவல்லவர் ஆதலின் 'கால பாசமே விழியாக்கொண்டு என்றார்.
ஒருவர் தம் இனத்தாரை மற்றொருவன் கொன்றால், அவனைக் கொன்று
அழித்துப் பழிதீர்க்க முனைவது இயற்கை ஆதலால். மன்மதனைக்
கொன்ற சிவபெருமானிடத்துப் பகைகொண்டு பழிதீர்க்கவந்த இரதியும்
மாற்றாளும் போல இப் பெண்கள் விளங்கினர்.
                                                     (8)

 
627. நாவியம் கமலத் துற்ற பிரமனை நகைப்பான் வேண்டி
வாவியம் கமல வாசக் கோசிகன் வாதிற் றீட்டும்
ஓவியம் என்ன நீல ஓதிமம் என்ன நீண்ட
காவியம் கண்ணார் காந்தட் கைதொழு திறைஞ்சி நின்றார்.

     (இ - ள்.) வாவி அம் கமல வாசக் கோசிகன் - தாமரைமலர்
மணம் வீசும் குளத்தின் அருகில் உறைகின்ற விசுவாமித்திரமுனிவன்,
நாவி அம் கமலத்து உற்ற பிரமனை நகைப்பான் வேண்டி - திருமாலின்
உந்திக் கமலத்தில் வாழும் பிரமதேவனை எள்ளி நகைக்க விரும்பி,
வாதில் தீட்டும் - வாதத்தினால் எதிராக எழுதிய, ஓவியம் என்ன
சித்திரம் போலவும், நீல ஓதிமம் என்ன - நீலநிறமான அன்னப்பறவை
போலவும் (விளங்கிய), நீண்ட காவியம் கண்ணார் - நீலமலர் போன்ற
நிண்ட கண்களை உடைய மாதர் இருவரும், காந்தள் கைதொழுது
இறைஞ்சி நின்றார் - காந்தள் மலர்போன்ற தம் கைகாளல் முனிவனை
வணங்கி நின்றனர்.

     விசுவாமித்திரமுனிவன் அளவற்ற தவவலிமை உடையவன்;
பிரமதேவனுக்கு ஒப்பானவன்; தானே ஓர் உலகத்தைப் படைக்கத்
தொடங்கியவன். அவன் அயனாலும் படைக்க முடியாத அழகுடைய
இரு பெண்களைப் படைத்தான் ஆதலால் 'பிரமனை நகைப்பான்
வேண்டி' என்றார். வாது - சொற்போர்; சொற்போட்டி.
                                                     (9)

 
628. தீதிலா மறைகள் நான்கும் தெளிவுற உணர்ந்த நீர்மைக்
கோதிலாக் குணத்தோர்க் கெல்லாம் கோபம்சண் டாளமென்பார்
ஆதலான் முனிவன் மூக்கி னாரழற் சீற்றத் தூடே
போதலால் அந்த மாதர் புலைச்சியர் ஆயி னாரே.

     (இ - ள்.) தீது இலா மறைகள் நான்கும் தெளிவு உற உணர்ந்த
நீர்மை - குற்றம் இல்லாத மறைநூல்கள் நான்கினையும் ஐயந்திரிபு
இன்றித் தெளிவாக அறிந்த தன்மையுடைய, கோது இலாக்
குணத்தோர்க்கு எல்லாம் -