பக்கம் எண் :


313

குற்றம் இல்லாத நற்குணத்தையுடைய முனிவர் யாவர்க்கும், கோபம்
சண்டாளம் என்பர் ஆதலால் - வருகின்ற கோபம் தாழ்வு தரும்
தீவினையின்பாற்பட்டது என்று அறிஞர் கூறுவர் ஆதலால், முனிவன்
மூக்கின் ஆரழல் சீற்றத்து ஊடே போதலால் - முனிவனுடைய மூக்கில்
கோபம் என்னும் வெப்பமான மூச்சுக்காற்று வழியாகப் பிறந்ததால்,
அந்த மாதர் புலைச்சியர் ஆயினார் - அப் பெண்கள்
புலைப்பெண்களாகத் தோன்றினார்கள்.

     நற்குணம் உடையபோது அருள்வழிப் பிறந்தோர் நல்லோர்
எனவும், சினம் முதலியன கொண்டபோது பிறந்தோர் தீயோர் எனவும்
கொள்ளுதல் வேண்டும், பிறந்த அவர்களுக்கு மிகுதியாக அக் குணமே
அமைந்திருக்குமாதலின் அங்ஙனம் கூறினார். கரிய நிறமும் திருந்தாத
பேச்சும் தீய செயல்களும் உடையவராக இருந்தனர் ஆதலால் புலையர்
போலத் தோன்றினர் என்பது.
                                                    (10)

 
629. மாதரை முனிவன் பார்த்து வரவழைத் திருத்தி நானா
பேதமும் எழுத்தும் சொல்லும் பெருங்கலை யிருநா லெட்டும்
கீதமும் நாத யாழும் கின்னரம் முதல வாய
போதமும் வாரி நீரிற் கரைத்துடன் புகட்டி னானே.

     (இ - ள்.) முனிவர் மாதரைப் பார்த்து வரவழைத்து இருத்தி -
விசுவாமித்திர முனிவன் அப் பெண்கள் இருவரையும் பார்த்துத் தன்
அருகில் வருமாறு அழைத்து இருக்கச்செய்து, நானா பேதமும் எழுத்தும்
சொல்லும் பெருங்கலை இருநா லெட்டும் - உலகில் வழங்கும் பலவகை
வேறுபாடுகளும் எழுத்திலக்கணமும் சொல் இலக்கணமும் அறுபத்துநான்கு
கலைகளும், கீதமும் நாத யாழும் கின்னரம் முதலாய போதமும் -
இசைகளும் யாழ் இசைக்கும் முறைகளும் கின்னரம் முதலிய
இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் முறையாகிய அறிவும், வாரி நீரில்
கரைத்து உடன் புகட்டினான் - கடல் நீர்ப் பெருக்கம்போல் அவர்தம்
உள்ளம் நிறையுமாறு பலமுறை விளக்கிக் கூறினான்.

     போதம் - அறிவு. ஈண்டு இசை அறிவு. வாரி நீரின் கரைத்து
என்பதற்கு அள்ளிக் குடிக்கும் நீரைப்போலக் கலைகளை எளிமையாக்கி
எனவும் பொருள் கொள்ளலாம்.
                                                    (11)

 
630. ஈடில்நா ரதரும் இன்சொற் கின்னரர் யாரும் ஏங்கப்
பாடினாற் றீய்ந் துலர்ந்த பயிரெலாடி விளைவு மல்கும்
வாடிநா ளனேகம் பட்ட மரங்களும் தழைக்கும் முன்னாள்
வீடினார் உயிர்வந் துற்று வெள்ளென்பும் விதிர்வி திர்க்கும்.

     (இ - ள்.) ஈடு இல் நாரதரும் இன்சொல் கின்னரர் யாரும் ஏங்க
- இசைப்புலமையில் ஒப்பு இல்லாத நாரத முனிவரும் இனிய மொழி
புகலும் கின்னரர்களும் கேட்டு ஏக்கம் கொள்ளும்படி, பாடினால் தீய்ந்து
உலர்ந்த பயிரெலாம் விளைவு மல்கும் - இப் பெண்கள் இசை பாடினால்
வெய்யிலால் தீய்ந்து காய்ந்த பயிர்கள் செழித்து மிகுந்த விளைவுப்
பயனைக் கொடுக்கும், அநேகம் நாள் வாடி பட்ட மரங்களும் தழைக்கும்
- பலநாளாக வாட்டம்