அடைந்து காய்ந்துபோன
மரங்களும் தழைத்து வளரும், முன்நாள்
வீடினார் வெள்ளென்பும் உயிர் வந்து உற்று விதிர்விதர்க்கும் -
பலநாட்களுக்கு முன் இறந்தவருடைய வெண்மையான எலும்பும் உயிர்
வரப்பெற்று அசையும்.
இசை
கேட்டுப் பயிர்விளைதல் இக் கால விஞ்ஞானிகளும் ஒப்புக்
கொள்ளும் ஓர் உண்மை. நோய் கொண்டவர் இசை கேட்டலால் சில
நோய்கள் நீங்கப்பெறுதலும் உண்டு. ஆதலால் இசையின் மேன்மை இச்
செய்யுளில் கூறப்பெற்றது. ஈடு + இல் = ஈடில்; முன் + நாள் முன்னாள்;
வெண்மை + என்பு = வெள்ளென்பு.
(12)
631. |
அந்தவே
ளையில்அ யோத்தி அரசனைக் கண்டு மீண்டு
கந்தவார் சடில மௌலிக் கௌவிகன் றன்னைப் போற்றி
இந்தவா வியிலே மன்னன் எண்ணரும் சேனை யோடும்
வந்தனன் என்ன வேத மாதவர் எடுத்து ரைத்தார். |
(இ - ள்.)
வேத மாதவர் - மறைநூல்களைக் கற்ற முனிவர்கள்,
அந்த வேளையில் அயோத்தி அரசனைக் கண்டு மீண்டு - அந்த
நேரத்தில் அயோத்தி மன்னனாகிய அரிச்சந்திரனைக் கண்டு திரும்பி,
கந்தம் வார் சடில மௌலி கௌவிகன் தன்னைப் போற்றி - மணம்
வீசம் நீண்ட சடை முடியினை உடைய விசுவாமித்திர முனிவனை
வணங்கி, மன்னன் இந்த வாவியிலே எண்ணரும் சேனையோடும்
வந்தனன் என்ன உரைத்தார் - அயோத்தி மன்னன் தன்னுடைய
அளவற்ற சேனைகளோடு வந்து இக் குளத்தின் கரையிலே தங்கி
யிருக்கின்றான் எனக் கூறினர்.
மன்னனுக்கு ஒப்பாக முனிவனைக் கூற விரும்பியவர்
சடை முடி
யுடையவர் என்ற குறிப்பில் 'சடில மௌலிக் கௌசிகன்' என்றார்.
மன்னன் வந்து தங்கியிருக்கும் செய்தியை கௌசிக முனிவர்க்கு மற்ற
மாதவர் கூறவேண்டியது கடமையாதலின் உரைத்தனர்.
(13)
632. |
புண்ணியம்
திரண்ட யாக்கைப் புரவலன் வந்தான் என்ன
எண்ணிய எண்ணம் எல்லாம் முடியும்என் றேம்பல் எய்தாப்
பண்ணியன் மதுரச் செஞ்சொற் பவளவாய்க் கரிய செவ்வேற்
கண்ணியர் தம்மை நோக்கிக் கௌசிகன் விளம்பல் உற்றான். |
(இ
- ள்.) கௌசிகன் - விசுவாமித்திர முனிவன், புண்ணியம்
திரண்ட யாக்கை புரவலன் வந்தான் என்ன - புண்ணியமே உடலெடுத்து
வந்தாற் போன்ற மன்னன் அங்கு வந்திருக்கின்றான் என்று மாதவர்
கூறியவுடன், எண்ணிய எண்ணம் எல்லாம் முடியும் என்று ஏம்பல்
எய்தா - நாம் நினைத்த எண்ணங்களெல்லாம் நிறைவேறும் என்று
மகிழ்ச்சிகொண்டு, பண் இயல் மதுரச் செஞ்சொல் பவளவாய் கரிய
செவ்வேல் கண்ணியர் தம்மை நோக்கி - இசையின் தன்மையும்
இனிமையும் உடைய மென்மொழிகளையும் பவளம் போன்ற வாளினையும்
சிவந்த வேல் போன்ற கரிய கண்களையும் உடைய பெண்களைப் பார்த்து
விளம்பல் உற்றான் - சொல்லத் தொடங்கினான்.
|