பச்சை நிறம் உடையதாகி,
பழுத்த செஞ்சாலி - பழுத்து விளைந்த
செந்நெற் பயிர்கள், கற்பினர் போல் தலை சாய்ந்த - கற்புடைய
பெண்களைப்போல் நாணத்தால் தலை குனிந்தன.
கற்புடைய
மாதர்போற் றலை வளைந்தன என்பது,
"சொல்லருஞ்
சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே"
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுடன் ஒப்பிடுக.
நெற்பயிரைக்
கற்புடை மாதராகவும், தண்ணீரை அதற்குக்
கேள்வனாகவும், இளங்குருத்தைச் சூல் ஆகவும், கதிர் வெளி வருவதை
மருவின்றதாகவும், தாட்பசுமையை மாதருடற் பசுமையாகவும், கதிர்
விளைந்து வளைந்ததை நாணத்தால் தலை வளைந்ததாகவும் குறித்தார்.
இஃது உருவகமும் உவமையும் கலந்த கலவையணி.
(44)
|
உழவர்
திருமகள் சிந்தனையுடன் கதிர் அரிதல் |
59. |
தோட்டு
வார்நறை சூழ்வயல் சோர்வொரீஇப்
பூட்டு வார்கதிர்ப் புள்ளங்கள் சூற்சங்கில்
தீட்டு வார்மலர்ச் செந்திரு காணமுன்
நீட்டு வாரென நெல்லரி வார்களே. |
(இ - ள்.)
தோடு வார் நறை சூழ் வயல் சோர்வு ஒரீஇ பூட்டு வார்
கதிர் புள்ளங்கள் - பூ இதழ்களிலிருந்து பொழிகின்ற தேன் பாய்கின்ற
வயல்களில் மள்ளர்கள் களைப்பு நீங்கிக் கைப்பிடியிலே சேர்த்துப்
பூட்டப்பட்ட நீண்ட ஒளியுடைய அரிவாள்களை, சூற் சங்கில் தீட்டுவார் -
சூற்கொண்ட சங்குகளில் தீட்டிக்கொண்டு, மலர்ச் செந்திரு காண முன்
நீட்டுவார் என - வயல்களில் மலர்ந்துள்ள தாமரையில் வாழ்கின்ற சிறந்த
திருமகள் காணும்படி அவள் முன்னே சங்கு வளையல்களைக் கைநீட்டிக்
காட்டுவார் போல, நெல் அரிவார்கள் - வளைந்த வெண்ணெற் கதிர்களை
அரிவார்கள்.
தோடு + வார் - தோட்டுவார்; "நெடிலோடு உயிர்த்தொடர்க்
குற்றுகரங்களுட் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே." ஒரீஇ :
சொல்லிசையளபெடை; ஒருவி என்பது ஒரீ என நின்று அளபெடுத்தது.
அரிவாளைத் தீட்டித் திருமகட்குக் காட்டுவதுபோலக் கைந் நீட்டுவார்
என்றாவது தம் வடிவத்தைத் திருமகட்குக் காட்டுவது போலக் கை
நீட்டுவார் என்றாவது விளக்கம் கொள்க. தாமரை மலர்கள் எங்கும்
இருப்பதால் அம்மலர்களில் திருமகள் இருப்பாள் என்று கொள்க.
அன்றியும், நெற்கதிர் விளையும் இடத்தில் திருமகள் வீற்றிருப்பள் என்று
நூல்கள் கூறுவதால் நெற்கதிர் முன் கைநீட்டியது திருமகட்குக்
காட்டியதாம் என்று கொள்க. இது "பதுமங் கொடிநகர்மின் பைந்துளவு
வில்வம், கதிர்விளைவு சங்குகட றீபம் வதுவைமனை. நற்பரிபாற்
பாண்டமிவை நாண்மலரா ணீங்காது நிற்பிடநல்
|