லோர்நெஞ் சுமே"
என்ற பாடலால் திருமகளுறைவிடம் அறிக.
(45)
|
களத்தில்
போரடித்து நெல் குவித்தல் |
60. |
சேற்று
வார்கதிர் சேரக் கொணர்ந்துவைத்
தாற்று வார்களத் தாற்றின் அடைந்துபோர்
ஏற்று வார்பக டேற்றி மிதித்தநெல்
தூற்று வார்குவிப் பார்சுமப் பார்களே. |
(இ - ள்.)
சேற்று வார் கதிர் சேரக் கொணர்ந்து வைத்து -
சேற்றிலே அறுத்துப் போட்ட நீண்ட கதிர்களை ஒருசேரக் கொண்டு
வந்து கட்டுக்களாகக் கட்டிவைத்து, ஆற்றின் களத்து ஆற்றுவார்கள் -
வழியே சுமந்துசென்று களத்தில் தணித்து இறக்குவார்கள், அடைந்து
போர் ஏற்றுவோர் - கதிர்களை அடுக்கி வைத்துச் சூட்டுப் போர்
வைப்பார்கள், பகடு ஏற்றி மிகுந்த நெல் தூற்றுவார் குவிப்பார்
சுமப்பார்கள் - எருமைமாட்டுப் பிணையல்களை ஏற்றி அவைகளால்
மிதிக்கப்பட்டு உதிர்ந்த நெல்லைப் பதர் நீங்குமாறு காற்றில்
தூற்றுவார்கள், நெல் மணிகளைக் குவிப்பார்கள், சுமந்துகொண்டு
போவார்கள்.
ஏகாரம் :
ஈற்றசை. பகடு - எருமைக்கடா. ஏற்றி மிதித்த நெல்
என்ற குறிப்பினால் பிணையலிட்டு மிதித்து நெல் வேறு, தாள் வேறாகப்
பிரித்துப் பின்னர் நெல்லைத் தூற்றுவார் என்பது தோன்றிற்று. வண்டி
நிற்கும் இடத்திற்குச் சுமந்துகொண்டுபோய்ப் பாரம் ஏற்றுவார் என்பது
தோன்றச் 'சுமப்பார்' என்றார்.
(46)
|
நெல்லை
வண்டியிலேற்றி மனை சேர்த்தல் |
61. |
பகடு
மட்டறப் பூட்டிப் படுத்தநெல்
சகடு முட்டவிட் டூர்ந்துதத் தம்குல
மகடு மக்களும் வைகுறும் வாழ்மனை
முகடு முட்ட நிறைப்பர்கள் முற்றுமே. |
(இ
- ள்.) பகடு மட்டறப் பூட்டிப் படுத்த நெல் - எருதுகளை
அளவில்லாமல் பிணைத்து மிதிப்பித்த நெல்லை, சகடு முட்ட இட்டு -
வண்டிகளில் நிரம்ப ஏற்றி, ஊர்ந்து தத்தம் குல மகடு மக்களும் வைகுறும்
வாழ் மனை முகடு முட்ட முற்றும் நிறைப்பார்கள் - ஓட்டிக்
கொண்டுபோய்த் தங்கள் தங்கள் குலத்து மனைவியும் பிள்ளைகளும்
வாழ்கின்ற வாழ்வினையுடைய வீடுகளில் முகடுகள் முட்டும்படி
குதிர்களிலெல்லாம் நிறைப்பார்கள்.
தம்
+ தம் - தத்தம். பொதுமகளிரை நீக்கக் 'குலமகடு' என்றார்.
குலமகளிர் வாழ்கின்ற மனையே வாழ்மனையாகும். ஏனையோர் மனைதாழ்
மனையாகும். உழவர் தத்தம் மனைகளில் நெற்களைக் கொண்டு போய்க்
குவித்து மனையின் உச்சி வரையும் கொட்டி நிறையவைத்துப் பூட்டுவார்கள்
என்று உழவர் சிறப்புக் கூறினர்.
(47)
|