745. |
சூளைக்
கூட்டம்யான் பொருந்திலேன் சொன்னஇப் பொருளுக
காளைக் கூட்டென அரசனை நோக்கியே முனிவன்
நாளைக் கூட்டுவன் இன்றுநீ நடபுறத் தென்னத்
தாளைக் கூட்டுற வாக்கிய தலையினான் சாற்றும். |
(இ
- ள்.) சூளைக் கூட்டம் யான் பொருந்திலேன் - பரத்தைப்
பெண்களை மணப்பதற்கு யான் மனம்பொருந்தேன், சொன்ன இப்
பொருளுக்கு ஆளைக் கூட்டு என - நான் தருவதாகச் சொன்ன
பொருளைப் பெறுவதற்கு ஓர் ஆளை என்னுடன் கூட்டி யனுப்புக என
மன்னன் கூற, முனிவன் அரசனை நோக்கியே - முனிவன் அரசனைப்
பார்த்து, நாளைக் கூட்டுவன் இன்று நீ நட புறத்து என்ன - நாளை
கூட்டியனுப்புகின்றேன் இன்று நீ நகரின் வெளியில் செல் என்றவுடன்,
தாளைக் கூட்டுற வாக்கிய தலையினான் சாற்றும் - முனிவனுடைய
திருவடிகளில் தன் தலையைச் சேர்த்து வணங்கிய மன்னன் கூறத்
தொடங்கினான்.
சூளை
- பரத்தை கூட்டம் - புணர்ச்சி. 'நீ நான் கொடுக்க
வேண்டிய பொருளை வாங்கிக்கொண்டு வருவதற்குரிய ஓர் ஆளை
என்னுடன் கூட்டி விடுக்க' என்றான் அரிச்சந்திரன், உடனே முனிவன் 'நீ
இப்போது வெளியேறு; நாளை ஆள் வரும் உன்னிடத்திற்கு' என்றான்
என்பது.
(127)
746. |
சிறுத்த
நாயினேன் செய்தஇப் புன்மைக ளெல்லாம்
பொறுத்தல் வேண்டுமென் றடியிணை இருகரம் பூண்டான்
கறுத்த சிந்தையன் கௌசிகன் பொறுத்தனன் என்றான்
மறுத்தும் இன்னும்ஒன் றுரைத்திடக் கேளெனா வள்ளல்.
|
(இ
- ள்.) சிறுத்த நாயினேன் செய்த இப் புன்மைகள் எல்லாம் -
சிறிய நாய் போன்ற நான் செய்த இப் பிழைகளையெல்லாம் பொறுத்தல்
வேண்டும் என்று அடியிணை இரு கரம் பூண்டான் -
பொறுத்துக்கொள்ளுதல் வேண்டும் என்று முனிவனுடைய இரு
திருவடிகளையும் இரண்டு கைகளால் பற்றிக்கொண்டான், கறுத்த
சிந்தையன் கௌசிகன் பொறுத்தனன் என்றான் - எப்பொழுதும் சினமே
கொண்ட மனத்தையுடைய கௌசிகமுனிவன் பொறுத்துக் கொண்டேன்
என்றான், மறுத்தும் வள்ளல் இன்னும் ஒன்று உரைத்திட கேள் எனா -
மறுபடியும் வள்ளலாகிய அரிச்சந்திரன் இன்னும் ஒன்று நான்
உரைக்கவேண்டும் கேள் என்று;
இச்
செய்யுள் குளகம். பொருள் முடியாமல் அடுத்த செய்யுளோடு
தொடர்வது. சினமே சிந்தையில் குடி கொண்டவன் இம் முனிவன்
ஆதலால் 'கறுத்த சிந்தையன்' என்றார். வள்ளல்; அரிச்சந்திரன். வள்ளல்
என்னும் எழுவாய் அடுத்த கவியில் "அளித்தான்" என்ற
பயனிலைகொண்டு முடியும்.
(128)
747. |
கையி
னாற்பிடித் தமைச்சரைக் காட்டிமற் றிவர்கள்
வையி னும்நினை மறுக்கினும் மற்றுமோர் குற்றம் |
|