சொல்லி அன்புடன்
விலகிச் சென்றான், புரம் எரித்தவன் அனைய
மாமுனி புவி புரந்தான் - திரிபுரத்தை எரித்த சிவபெருமானைப் போன்ற
முனிவன் பூமியை அரசாண்டான், சிரமம் நீங்கு வீரர்கள் செறி மன்றமும்
தெருவும் - களைப்பு நீங்கிய வீரர்கள் இருக்கின்ற மன்றங்களிலும்
தெருக்களிலும், பெருகும் உட்களிப்பால் பிரமசாரிகள் மலிந்தனர் -
மிகுந்த உள்ளக் களிப்போடு பிரமசாரிகள் நிறைந்து விளங்கினார்கள்.
பிரமசாரிகள்
- திருமணம் செய்துகொள்ளாதவர். இவர்கள்
தவநெறியறிந்து நடக்க முனிவரை அடுத்து வாழ்வர் ஆதலால் நகரத்தில்
அவர்கள் நிறைந்தனர் என்றார். உட்களிப்பால் பிரமசாரிகள் மலிந்தனர்
எனவே இல்லறத்தார் மனக்கவலையாற் குறைந்து வாழ்ந்தனர் என்பது
தோன்றிற்று.
(131)
750. |
காமத்
தோகையர் கருங்குழல் விரித்தனர் பரவிச்
சேமத் தூமங்கள் காட்டும்அச் சிறப்பெலாந் தேய்ந்து
தாமத் தூமலர்த் தருப்பைகள் சமிதைகள் விரித்த
ஓமத் தூமமே ஓங்கின உயர்மனை எல்லாம். |
(இ - ள்.) காமத் தோகையர் கருங்
குழல் விரித்தனர் பரவி -
அழகிய தோகை மயில்போன்ற பெண்கள் தங்கள் கரிய கூந்தலை
விரித்துப் பரவச் செய்து, சேமத் தூமங்கள் காட்டும் அச் சிறப்பெலாம்
தேய்ந்து - அவை உலர்வதற்காக அகில் முதலியவற்றால்
புகையுண்டாக்கும் சிறப்பெலாம் குறைந்து, தாமத் தூமலர் தருப்பைகள்
சமிதைகள் விரித்த ஒமத் தூபமே - மாலையாகத் தொடுத்த மலர்களும்
தருப்பைப் புல்லும் சமிதை என்னும் விறகுகளம் நிறைந்த ஓமம்
வளர்க்கும் புகையே, உயர் மனை எல்லாம் ஓங்கின - உயர்ந்த வீடுகள்
எல்லாவற்றிலும் நிறைந்தன.
இல்லறத்து வாழ்வார் இன்பந்துய்த்தற்கிடமாகிய
அகிற்புகை முதலிய
நீங்கித் துறவறத்தார்க்குரிய ஓமப்புகைகளே உயர்ந்தன என்று முனிவர்
ஆட்சியைச் சிறப்பித்தார் என்க.
(132)
751. |
தோலி
னோர்களும் துரகதத் தோர்களும் சோதி
வேலி னோர்களும் மாதரும் மிடைந்தமை மாறி
நூலி னோர்களும் நுண்ணிடைக் கவுந்தியர் களுமுக்
கோலி னோர்களும் மலிந்தனர் கொடித்தெரு வெல்லாம்.
|
(இ
- ள்.) கொடி தெரு எல்லாம் - கொடி கட்டிய தெருக்கள்
எல்லாம், தோலினோர்களும் துரகத்தத்தோர்களும் - யானை வீரர்களும்
குதிரை வீரர்களும், சோதி வேலினோர்களும் மாதரும் மிடைந்தமை மாறி
- ஒளிமிக்க வேற்படையுடைய வீரர்களும் பெண்களும் நிறைந்திருந்த
நிலை மாறி, நூலினோர்களும் நுண் இடை கவுந்தியர்களும் - மறைநூலை
ஓதும் அந்தணர்களும் ஒருவகைத் தவநெறியுடைய நுட்பமான
இடையினையுடைய பெண்களும், முக் கோலினோர்களும் மலிந்தனர் -
முக்கோல் பிடித்த துறவிகளும் நிறைந்தனர்.
|