தோல்
- யானை, நூலினோர், பூணூல் தரித்தவர் என்பதும் ஆம்.
கவுந்தியர் - ஒருவகைத் தவநெறியுடைய பெண்கள். முக்கோல் -
முனிவர்தம் கையில் வைத்திருக்கும் திரிதண்டம். தெருவெல்லாம் முனிவர்
கூட்டங்களே நிறைந்தன. யானை, குதிரை, வேல் கொண்ட வீரரும்
மங்கையரும் மறைந்தனர்.
(133)
752. |
புனித
மாதவர் சூழ்ந்திடப் புரவலர் போற்றக்
கனிதி ருந்திய செய்யவாய்க் கன்னியர் காண
நனிதி ருந்திய நவமணி யாதனத் தேறி
இனிதி ருந்துல காண்டனன் கௌசிகன் இப்பால். |
(இ - ள்.) இப்பால் - அயோத்தி
நகரமாகிய இவ்விடத்தில்,
புனித மாதவர் சூழ்ந்திட புரவலர் போற்ற - தூய்மையான முனிவர்கள்
சூழவும் மற்றைய மன்னர் பாராட்டவும், கனி திருந்திய செய்ய வாய்
கன்னியர் காண - கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயினையுடைய
பெண்கள் கண்டு களிக்கவும், நனி திருந்திய நவமணி ஆதனத்து ஏறி -
மிகத் திருத்தமாகச் செய்யப்பட்ட நவமணிகள் பதித்த ஆசனத்தில் ஏறி,
இனிது இருந்து - இனிமையாக வீற்றிருந்து, கௌசிகன் உலகு ஆண்டனன்
- கௌசிகமுனிவன் இவ்வுலகத்தை ஆண்டான்.
பணிப் பெண்களை விலக்காதிருந்தனன் ஆதலால் 'கன்னியர்
காண' என்றார். வேற்றுநாட்டுமன்னர் வந்து கண்டு திறைசெலுத்தும் படி
ஆண்டனன் என்பது 'புரவலர் போற்ற' என்ற குறிப்பால் தோன்றிற்று.
(134)
சூழ்வினைக்
காண்டம் முற்றிற்று.
|