சிறையிழந்த
பறவை, வேலியில்லாப் பயிர், கையிழந்த யானை,
ஆட்டும் கயிறற்ற பாவை, உயிரற்ற உடல் இவை அரசனையிழந்த அந்நகர
மக்களுக்குக் குவமையாகக் கொள்க. இவை ஒரு செயலும் புரியாது
அழிவதற்கே உரியனவாதல்போலக் குடிகளும் இறப்பதற்கே மனந்துணிந்து
வருந்திப் புலம்பினர் எனக் கொள்க.
(3)
756. |
கொடிமீது
செறிதேரும் குஞ்சரமும் பொற்சிவிகைக்
குழாமு இன்றிப்
படிமீது நடந்திடவும் படித்தனவோ பார்வேந்தன்
பாதம் என்பார்
அடிமீது தொழும்அரசர் முடிமீதும் மடிமீதும்
அன்றிச் சுட்ட
பொடிமீது நடந்திடவும் பொறுத்தனவோ குலகுமரன்
பொற்றாள் என்பார். |
(இ - ள்.) கொடிமீது செறி தேரும்
குஞ்சரமும் பொற்சிவிகைக்
குழாமும் இன்றி - மேலே கொடி கட்டிய தேரும் யானையும் பொற்
பல்லக்கும் இல்லாமல், படிமீது நடந்திடவும் படித்தனவோ பார் வேந்தன்
பாதம் என்பார் - இம் மாநிலத்தை ஆளுகின்ற மன்னனுடைய திருவடிகள்
பூமியின்மேல் நடக்கவும் கற்றிருக்கின்றனவோ எனக் கூறினார்கள், குல
குமரன் பொற்றாள் - குலத்திற்பிறந்த இளவரசனாகிய தேவதாசனுடைய
கால்கள், அடிமீது தொழும் அரசர் முடிமீதும் மடிமீதும் அன்றிச் சுட்ட
பொடிமீது நடந்திடவும் பொறுத்தனவோ என்பார் - தன் அடிமீது வணங்குகின்ற அரசருடைய
முடியின்மேலும் மடியிலும் அல்லாமல்
சுடுகின்ற பொடியாகிய இம் மண்ணின்மேல் நடந்திடவும் பொறுத்துக்
கொள்ளுகின்றனவோ என்பார்.
மண்ணில் நடந்து பயின்றறியாத மன்னன் பாதங்கள்
இன்று நடக்கக்
கற்றனவோ என்றும், படியாளும் மன்னர் வந்து பரிந்தெடுத்து முடிமேலும்
மடிமேலும் வைத்துக் கொஞ்சும் மைந்தன் அடிகள் இப்போது பொடியில்
மிதிக்க எவ்வாறு பொறுத்தன என்றும் புலம்பினர்.
(4)
757. |
அஞ்சாயன்
மடஅன்னத் தணிதூவி யதனாலும்
அனிச்சத் தாலும்
பஞ்சாலும் பதைபதைக்கும் பதத்தாட்குக் கானடையோ
பலித்த தென்பார்
செஞ்சாலிக் கோசலமும் இராசகுல வளநாடும்
தேவர் நாடும்
அஞ்சாமற் காத்தருள்எம் பெருமானுக் கிதுவோவந்
தடுத்த தென்பார். |
(இ
- ள்.) அம் சாயல் மட அன்னத்து அணி தூவி அதனாலும் -
அழகிய மென்மைத்தன்மையுடைய இளைய அன்னப்பறவையின் அழகிய
|