759. |
முல்லைமுகை
நகையாளும் முடிவேந்த னும்மகனும்
முழுதும் போன
எல்லைஎலா மணஅறையும் மலரணையும் உண்டோஎன்
றிரங்கி வீழ்வார்
தொல்லைவிதிப் பயனாலே வந்திரந்த மாமுனிவன்
சொன்ன வெல்லாம்
இல்லைஎனா தீந்தோருக் கித்தனையோ பெரும்பேறென்
றேங்கி வீழ்வார். |
(இ
- ள்.) முல்லை முகை நகையாளும் முடி வேந்தனும் மகனும்
- முல்லை அரும்புபோன்ற பல் வரிசையுடைய அரசியும் முடி மன்னனும்
மகனாகிய தேவதாசனும், முழுதும் போன எல்லை யெலாம் - முழுவதும்
சென்ற இடங்களில் எல்லாம், மண அறையும் மலர் அணையும் உண்டோ
என்று இரங்கி வீழ்வார் - படுக்கும் அறையும் மலர்ப் படுக்கையும்
உண்டோ என்று இரக்கங்கொண்டு வருந்திக் கீழே விழுவார்கள்,
தொல்லை விதிப் பயனாலே - பழைய விதியின் பயனால், வந்து இரந்த
மா முனிவன் சொன்ன வெல்லாம் - வந்து இரந்து கேட்ட பெரிய
முனிவன் சொன்னவற்றை யெல்லாம், இல்லை எனாது ஈந்தோருக்கு -
இல்லை என்று கூறாது கொடுத்தோருக்கு, இத்தனையோ பெரும் பேறு
என்று ஏங்கி வீழ்வார் - இவ்வளவோ அடைதற்குரிய பெரிய மேன்மை
என்று வருந்தி விழுவார்கள்.
இல்லை
யென்னாமல் வழங்கிய வள்ளல்களுக்குப் பெருமையும்
செல்வமும் பெருகும் என்று முன்னோர்கள் சொன்னார்களே, என்ன
பெருமை கிடைத்துளது? ஒன்றுமில்லாது செல்லும்படி நேர்ந்ததே எனவும்
கூறினன்.
(7)
760. |
வல்லார்க்கும்
மாட்டார்க்கும் மறமேநன் றென்றுரைப்பார்
மறநன் றாமோ
அல்லார்க்கும் குழன்மடவீ ரறமேநன் றென்றுரைப்பா
ரதுநன் றாகின்
நல்லார்க்கும் தீயார்க்கும் எல்லார்க்கும் ஒருமையினா
னடவா தென்னே
எல்லார்க்கும் உளதாகில் எங்கோனுக் கிலையான
தென்னோ என்பார்.
|
(இ
- ள்.) வல்லார்க்கும் மாட்டார்க்கும் மறமே நன்றென்று
உரைப்பார் - செய்ய வல்லமையுடையவர்க்கும் வல்லமை இல்லாதவர்க்கும்
வீரமே நன்று என்று சொல்வர், மறம் நன்று ஆமோ - வீரம் நன்மை
விளைக்குமோ, அல் ஆர்க்கும் குழல் மடவீர் - இருளை நிறைக்கும்
கருங்கூந்தலையுடைய பெண்களே, அறமே நன்று என்று உரைப்பார் அது
நன்று ஆகில் - அறமே நல்லது என்று சொல்லுவார்கள் அது நல்லது
ஆகுமானால், நல்லார்க்கும் தீயார்க்கும் எல்லார்க்கும் ஒருமையினால்
நடவாது என்னே - நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் எல்லோருக்கும்
பொதுவாக ஒரே
|