தன்மையோடு அவ்வறம்
நன்மையாக நடவாதிருப்பதற்குக் காரணம்
என்ன, எல்லார்க்கும் உளது ஆகில் - அறம் எல்லோருக்கும் நன்மை
செய்வதாய் இருக்குமானால், எங்கோனுக்கு இலையானது என்னோ என்பார்
- எங்கள் வேந்தனுக்குப் பயன் தராது போனது என்ன காரணமோ என்று
கூறுவார்கள்.
அல்
- இருள். ஆர்க்கும் - நிறைக்கும். இருளை நிறைவித்த கூந்தல்
எனக் கொள்க. அன்றியும் உவமவுருபாகவும் கொள்ளலாம். ஆர என்பது
உவமவுருபு எனப் பேராசிரியர் இளம்பூரணர் கூறுவது காண்க. அறம்
பொதுவானது. அது சிலர்க்கு நன்மையும் சிலர்க்குத் தீமையும் செய்வது
ஏன்? என்பது கருத்து.
(8)
761. |
கொண்டிருந்த
வளநாடும் குறையாத பெருந்திருவும்
கொடித்திண் டேரும்
பண்டிருந்த மாளிகையும் பரிசனமும் தமக்களித்துப்
பால னோடும்
வண்டிருந்த தாரானும் வாணுதலும் வறியோர்போல்
வனத்தே போகக்
கண்டிருந்தும் விலக்காத கௌசினார் தம்மனமும்
கல்லோ என்பார். |
(இ - ள்.) கொண்டிருந்த வள நாடும்
- தனக்கு உரிமையாகக்
கொண்டிருந்த வளமான நாட்டையும், குறையாத பெருந்திருவும் குறையாத
பெருஞ்செல்வத்தையும், கொடி திண் தேரும் - கொடி கட்டிய வலிய
தேரையும், பண்டு இருந்த மாளிகையும் - முன்பு தான் தங்கி இருந்த
அரண்மனையையும், பரிசனமும் தமக்கு அளித்து - ஊழியர் முதலான
துணைவர்களையும் தமக்கே கொடுத்துவிட்டு, பாலனோடும் வண்டு இருந்த
தாரானும் வாள் நுதலும் - தன் இள மைந்தனோடும் வண்டுகள்
மொய்க்கும் மாலை அணிந்த மன்னனும் ஒளி பொருந்திய
நெற்றியையுடைய மனைவியும், வறியோர் போல் வனத்தே போக -
ஏழைமக்கள்போலக் காட்டிற்குச் செல்ல, கண்டிருந்தும் விலக்காத
கௌசிகனார் தம் மனமும் கல்லோ என்பார் - பார்த்திருந்தும் விலக்கி
நாட்டிற் சேர்த்து நன்மைசெய்யாத கௌசிகமுனிவனுடைய மனமும்
கல்லோ என்பார்கள் (சிலர்.)
இத்துணைச் செல்வங்களையும் வாரி வழங்கிய மன்னனுக்கு
நல்லுரை
கூறி ஒரு மனையளித்துத் தங்கும்படி செய்யாத கோசிகனார் மிகவும்
வன்கண்மையுடையவர்; இரக்கம் சிறிதுமில்லாதவர் என்றும் சிலர் ஏசினர்
என்க.
(9)
762. |
செம்மையினால்
உலகமெலாம் தனக்களித்துச் செறிவனத்தே
தேம்பிச் செல்வோர்
தம்மைவர வழைத்திருத்தி ஒருமனைக்குத் தலமீயாத்
தறுகட் பாவி |
|