|
நம்மைஎலாங்
காத்தளிக்க வல்லவனோ எனக்கரங்க
ணடுக்கி மாறா
வெம்மையினால் வெய்துயிர்ப்பார் மின்னாமல் இடிவந்து
வீழ்ந்த தென்பார். |
(இ
- ள்.) செம்மையினால் உலகம் எலாம் தனக்கு அளித்து -
நல்ல எண்ணத்தோடு உலகம் முழுவதையும் தனக்குக் கொடுத்து விட்டு,
செறி வனத்தே தேம்பிச் செல்வோர் தம்மை - நெருங்கிய காட்டின்கண்
வருந்திச் செல்கின்ற மன்னன் முதலானவர்களை, வரவழைத்து இருத்தி -
வருமாறு அழைத்து இருக்கச்செய்து, ஒரு மனைக்குத் தலம் ஈயா தறுகண்
பாவி - ஒரு வீடு கட்டி வாழ இடம் கொடாதிருக்கின்ற அஞ்சாமையுடைய
இப் பாவியாகிய முனிவன் நம்மை யெலாம் காத்து அளிக்க வல்லவனோ
என - நம்மையெல்லாம் பாதுகாத்து அருள்செய்ய வல்லவனோ என்று,
கரங்கள் நடுங்கி - கைகள் நடுக்கங்கொண்டு, மாறா வெம்மையினால்
வெய்து உயிர்ப்பார் - தம்மை விட்டு நீங்காத கவலையான வெப்பத்தினால்
நெருப்புப்போல் பெருமூச்சு விடுவார்கள். மின்னாமல் இடி வந்து வீழ்ந்தது
என்பார் - மின்னாமலே இடிவந்து விழுந்ததே என்பார்கள்.
மின்னிய
பிறகே இடி இடிக்கும். அதுபோல முன் குறி தோன்றிய
பிறகே தீமைவந்து சேரும்; இம் மன்னனுக்கும் நாட்டுமக்களுக்கும் முன்
அறிவிப்பு இன்றியே தீமை வந்து விளைந்தது. இது "பிறிது மொழிதல்
அணி". உவமானத்தைமட்டும் கூறி உவமேயத்தைப் பெற வைப்பது
அவ்வணியாகும். நாடுநகரங்களையெல்லாம் கொடுத்துக் காடு செல்லும்
இவர்களுக்கு ஒரு வீடு தந்து ஆதரிக்காத விசுவாமித்திரன் நம்மை
எவ்வாறு காப்பாற்றுவான் என்று நம்பலாம் என்றும் சிலர் உரைத்தனர்.
(10)
763. |
என்றலமந்
தனைவோரும் வயிறலைத்து விழுந்தேங்கி
இரங்குங் காலை
கன்றினொடும் பிடியினொடும் கிளையினொடும் வனம்புகுதும்
களிறே போல
இன்றளித்த தருண்முனிவர்க் கேற்றனவோ வேற்றிலவோ
என்னா ஏங்கிக்
குன்றனைய மதில்கடந்தே தனிநடந்து சரயுவினைக்
குறுகி னானே. |
(இ - ள்.) என்று அலமந்து அனைவோரும்
வயிறு அலைத்து
விழுந்து ஏங்கி இரங்கும் காலை - இவ்விதம் கூறி மயங்கி எல்லோரும்
வயிற்றில் அடித்துக்கொண்டு விழுந்து ஏக்கங்கொண்டு வருந்திய
நேரத்தில், கன்றினொடும் பிடியினொடும் கிளையினொடும் வனம் புகுதும்
களிறே போல - கன்றோடும் தன் பெண்யானையோடும் சுற்றத்துடனுட்
காட்டிற்குச்செல்லும் ஆண்யானைபோல, இன்று அளித்தது அருள்
முனிவர்க்கு ஏற்றனவோ ஏற்றிலவோ என்னா ஏங்கி - இன்று நாம்
கொடுத்தது முனிவர்க்கு மனநிறைவை உண்டாக்கியதோ இல்லையோ
என்று கவலைகொண்டு, குன்று அனைய மதில் கடந்தே தனி நடந்து
சரயுவினைக் குறுகினானே -
|