பக்கம் எண் :


376

மலைபோன்று விளங்கும் மதிலைக்கடந்து தனியாக நடந்து
சரயுநதிக்கரையை அடைந்தான்.

     தனி நடந்து என்பது அரசகோலத்தோடு அன்றித் தனிமனிதன்
போலச் செல்வமின்றிச் சென்றான் என்ற கருத்தை விளக்கும். யானை
அரசனுக்கும் பிடி சந்திரவதிக்கும் கன்று தேவதாசனுக்கும் கிளை
அமைச்சன் முதலியவருக்கும் உவமை. கிளை - சுற்றம். யானை கூட்டம்
கூட்டமாகத் திரியும். அதனால் 'கிளையினொடும் வனம் புகுதும்
களிறேபோல்' என்றார்.
                                                    (11)

 
764. உரைபெறுசீ ரிரவிகுலத் தரசர்க்கு வழிவழியே
   உரிமை யாய
சரையுவெனுந் தாதிஅரிச் சந்திரற்கு வந்தவினை
   தானே தென்னா
விரைமலர்த்தாள் பூண்டுகிடந் தரற்றிடவும் இழந்தேகி
   விரைந்து போய்மேற்
கரைஅணுகி வரிமணலில் விரிமலர்கள் சொரியும்நறுங்
   காவிற் புக்கான்.

       (இ - ள்.) உரை பெறு சீர் இரவி குலத்து அரசர்க்கு வழி
வழியே உரிமையாய - பாராட்டப்படும் சிறப்புடைய கதிரவன் குலத்து
மன்னர்க்கு வழிவழியாக உரிமைபூண்ட, சரையு எனும்தாதி - சரையுநதி
என்னும் செவிலித்தாய், அரிச்சந்திரற்கு வந்த வினைதான் ஏது என்னா -
அரிச்சந்திரமன்னனுக்கு வந்த தீவினை என்ன என்று, விரை மலர்த்தாள்
பூண்டு கிடந்து அரற்றிடவும் - மணம் வீசும் மலர் போன்ற பாதங்களைப்
பற்றிக்கிடந்து ஒலி செய்யவும், இழிந்து ஏகி விரைந்து போய் மேற்கரை
அணுகி - மன்னன் அந்த ஆற்றில் இறங்கிச் சென்று விரைந்துபோய்
மேற்குக்கரையை அடைந்து, வரி மணலில் விரி மலர்கள் சொரியும் -
அடுக்கு அடுக்காகப் படிந்துள்ள பரந்த மணலில் மலர்ந்த, மலர்களைச்
சொரிகின்ற, நறுங் காவிற் புக்கான் - நல்ல சோலையினுள் சென்றான்.

     சரயுநதியுள் இறங்கிச்சென்றான். அந் நதியிலுள்ள நீர் காலைச் சுற்றி
யோடுவது தாள் பூண்டுகிடந்துபோலத் தோன்றியது. அந் நதி காலைச்சுற்றி
வளைந்தோடி ஒலிப்பது அரிச்சந்திரனை நோக்கி 'எனக்கு இவ்வாறு வந்த
விதி என்ன' வென்று கூறிக் காலைப்பிடித்துக் கொண்டு புலம்புவது போலத்
தோன்றியது என்பது கருத்து.
                                                    (12)

 
765. வரைக்கனக யுத்தினன்அம் மலர்க்காவில் விரிமணன்மேல்
   வந்தி ருந்தான்
விரைக்கரும்பூங் குழலாளும் திருமகனும் இருபாலும்
   வீற்றி ருந்தார்
திரைக்கடலுட் பொறான்எனப்போய்ச் செங்கதிரோன்
                                 சென்றனன் அச்
   சென்ற காலை
உரைப்பனவும் விளைப்பனவும் அறிதுமெனா முனிவனும்வந்
   தொளித்தி ருந்தான்.