(இ
- ள்.) வரை கனக புயத்தினன் அம் மலர்க் காவில் விரி
மணல்மேல் வந்து இருந்தான் - பொன்மலைபோன்ற புயத்தினை யுடைய
மன்னன் அந்த மலர்ச்சோலையில் விரிந்து பரந்த மணல்மேல் வந்து
தங்கினான், விரை கரும் பூங்குழலாளும் திருமகனும் இருபாலும்
வீற்றிருந்தார் - மணம்பொருந்திய கரிய கூந்தலையுடைய மனைவியும்
அழகிய மகனும் இருபக்கத்தினும் வந்து தங்கினார்கள், செங் கதிரோன்
பொறான் எனப் போய் திரைக் கடலுள் சென்றனன் - சிவந்த
கதிர்களையுடைய கதிரவன் மன்னன் நிலை கண்டு மனம் பொறுக்கா
தவனாய்ச் செல்பவன்போலச் சென்று அலைகளையுடைய மேல்கடலில்
மறைந்தான், சென்ற அக் காலை உரைப்பனவும் விளைப்பனவும் அறிதும்
எனா முனிவனும் வந்து ஒளித்து இருந்தான் - கதிரவன் மறைந்த அந்த
நேரத்தில் அவர்கள் பேசுவனவற்றையும் செய்வன வற்றையும்
தெரிந்துகொள்வோம் என்று விசுவாமித்திமுனிவன் அங்கு வந்து
ஒளிந்துகொண்டிருந்தான்.
சூரியன்
தன் குலத்தரசன் இவ்வாறு இழிந்தநிலையடைந்தது காண
மனம் பொறாதவன்போல் மறைந்தான் என்பது குறிப்பு. அறிதும் - அறி :
பகுதி; தும் : விகுதி. இவ்விகுதி எதிர்காலங் காட்டிற்று. அறிவோம் என்பது
பொருள்.
(13)
766. |
அக்காலத்
தமைச்சரெலாம் அடல்வேந்தன் அடிபோற்றி
அரசே நீமீண்
டெக்காலம் எழுந்தருள்வ தென்றுரைக்க ஆங்கவரை
இருகண் நோக்கி
முக்காலங் களும்உணரும் முனிவனுக்கின் றியான்கொடுத்த
மூதூர் தன்னில்
எக்கால மும்வருவ தில்லைஎன்றான் அமைச்சரெலாம்
ஏங்கி வீழ்ந்தார். |
(இ - ள்.) அக் காலத்து அமைச்சர்
எலாம் அடல் வேந்தன்
அடி போற்றி - அக்காலத்தில் அமைச்சர் எல்லோரும் வலிமை வாய்ந்த
மன்னனுடைய திருவடிகளை வணங்கி, அரசே நீ மீண்டு எக்காலம்
எழுந்தருள்வது என்று உரைக்க - அரசே! நீ மீளவும் எப்பொழுது
திரும்பி வருவாய் என்று கேட்க, ஆங்கு அவரை இரு கண் நோக்கி -
அங்கு அவர்களை மன்னன் தன் இரண்டு கண்களாலும் பார்த்து,
முக்காலங்களும் உணரும் முனிவனுக்கு இன்று யான் கொடுத்த மூதூர்
தன்னில் - மூன்று காலங்களையும் அறிந்து கூறவல்ல முனிவனுக்கு யான்
இன்று கொடுத்த பழமையான ஊரில், எக்காலமும் வருவது இல்லை
என்றான் - நான் எக்காலமும் வரமாட்டேன் என்றான்,
அமைச்சரெல்லாம் ஏங்கி வீழ்ந்தார் - மந்திரிகள் எல்லோரும்
ஏக்கங்கொண்டு கீழே விழுந்தனர்.
அமைச்சர்களெல்லாரும் வணங்கினர் அரசன் பாதத்தை
என்று
கொள்க. எக்காலம் எழுந்தருள்வதெனக் கேட்டவர் சிலரே எனக் கொள்க.
சத்தியகீர்த்தி முதலிய அறிவிற்சிறந்த அமைச்சர் இவ்வாறு கேளார்;
கேட்பின் வாய்மைக்கு மாறாகும் ஆதலின். அரிச்சந்திரன் நான் கொடுத்த
நகருக்கு
|