770. |
படிபுரக்கு
மன்னவன்கேட் டிருகரத்தாற் செவிபுதைத்துப்
பாவம் அந்தோ
குடிகெடினும் உயிர்கெடினும் கொடுத்ததுவாங் கேன்என்று
கூறும் எல்லை
கடிபொழிலிற் காத்திருந்த கௌசிகனும் வந்தெதிர்த்தான்
கண்ட போதே
அடியிணைதன் முடிசாத்தி இருகரத்தால் உறப்பூண்டான்
அரசர் கோமான். |
(இ
- ள்.) படி புரக்கும் மன்னவன் கேட்டு - பூமியை ஆளுகின்ற
மன்னவன் தன் காதாற் கேட்டு, இரு கரத்தால் செவி புதைத்து - இரண்டு
கைகளாலும் செவிகளை மூடிக்கொண்டு, பாவம் அந்தோ குடி கெடினும்
உயிர் கெடினும் கொடுத்தது வாங்கேன் என்று - ஐயோ பாவம்! என்
குடியே கெடுவதாய் இருப்பினும் என் உயிரே கெடுவதாய் இருப்பினும் நான்
கொடுத்ததைத் திரும்ப வாங்கமாட்டேன் என்று, கூறும் எல்லை -
கூறுகின்ற நேரத்தில், கடி பொழிலிற் காத்திருந்த கௌசிகனும் வந்து
எதிர்த்தான் - மணங்கொண்ட சோலையிலே மறைந்து காத்துக்கொண்டிருந்த
கௌசிகமுனிவனும் எதிரில் வந்து நின்றான், அரசர் கோமான் - மன்னர்
மன்னனாகிய அரிச்சந்திரன், கண்டபோதே அடியிணை தன் முடி சாத்தி
இரு கரத்தால் உறப் பூண்டான் - முனிவனைக் கண்டவுடனே அவனுடைய
திருவடிகளைத் தன் முடியிற் சேர்த்துக்கொண்டு இரண்டு கைகளாலும்
பற்றிக்கொண்டான்.
மன்னன்
தன் தலையை முனிவனுடைய கால்களிற் சேர்த்துக்
கைகளாலும் பிடித்துக்கொண்டான். விறல் வேந்தர் கூறிய உரைகளை
முனிவன் கேட்டுச் சினந்து வந்தான்போலும் என்று கருதிய அச்சத்தால்
காலைப் பற்றினான் எனக் கொள்க.
(18)
771. |
வெய்தாநீ
வேடுவரால் விலங்கனைத்தும் கொல்வித்தாய்
வெகுண்டே னத்தை
எய்தாய்என் மக்களையும் இசைகேட்டுத் துரத்தடித்தா
யின்றும் என்னை
வைத்தாய்நீ எனக்களித்த மண்டலத்தை யான்றரநீ
வாங்கா யாகிற்
செய்தாய்இன் றிவருரைத்த தீமைஎல்லாம் என்னமுனி
செப்பி னானே. |
(இ - ள்.) வெய்தா நீ வேடுவரால்
விலங்கு அனைத்தும் கொல்
வித்தாய் - கொடுமையாக நீ வேடுவர்களால் விலங்குகள் எல்லா
வற்றையும் கொல்லும்படி செய்தாய், வெகுண்டு ஏனத்தை எய்தாய் -
கோபம் கொண்டு பன்றியை நீ அம்பால் எய்து துன்புறுத்தினாய், என்
மக்களையும் இசை கேட்டுத் துரத்தி அடித்தாய் - என்னுடைய பெண்
மக்களையும் அவர்கள் பாடி இசையைக் கேட்டு ஒன்றும் கொடாமல்
துரத்தியடித்தாய், இன்றும்
|