|
கோசலத்தில்
தேனாறு கரும்பாறு |
68. |
சேறு
பாய்மலர்த் தேனொடு தீங்கனி
ஊறு பாய்வவும் ஒண்கரும் பட்டதீஞ்
சாறு பாய்வவும் தத்தமிற் கூடியே
ஆறு பாய்வன அங்கங் கனந்தமே. |
(இ
- ள்.) சேறு பாய் மலர்த் தேனொடு - நிலத்திலே சேறாகும்படி
பாய்கின்ற பூவின் தேனொடு, தீம் கனி ஊறு பாய்வவும் - இனிமையான
பழச்சாறு பாய்கின்றவைகளும், ஒண் கரும்பு அட்டதீஞ்சாறு பாய்வவும் -
இனிய கரும்பிலிருந்து ஆலையில் ஆட்டி எடுக்கப்பட்ட இனிய கருப்பஞ்
சாறு பாய்கின்றவைகளும் ஆகிய இவைகள், தம்மிற் கூடி - தங்களுக்குள்
ஒன்றாகக் கூடி, ஆறு பாய்வன - ஆற்றிற் பாய்கின்றவை, அங்கு அங்கு
அனந்தம் பல - பல இடங்களிலும் பல உள.
ஒடு
: எண்ணுப்பொருளில் வந்தது; அங்கு அங்கு : அடுக்குப்பன்மை
பற்றி வந்தது. மலர்த்தேனும் பழச்சாறும் கருப்பஞ் சாறுங்கூடி யாற்றிற்
பாயும் இடங்கள் பல அந்நாட்டில் உள்ளன என்பது. இவைகள் நீர் போல
எங்கும் ஊறி வழிந்து வாய்க்கால் வழிச்சென்று ஆற்றில் கலக்கும்என்பது
கருத்து.
(54)
|
தென்றலும்
மகரந்த மழையும் |
69. |
மன்றல்
தங்கும் மலர்களின் மேய்ந்திளந்
தென்றல் வந்தவண் சிந்திய தாதுகள்
குன்றின் வீழ்பொன் மழைக்குழு என்னவே
முன்றி லும்மணி மாடமும் மொய்க்குமே. |
(இ - ள்.)
இளந் தென்றல் மன்றல் தங்கும் மலர்களின் மேய்ந்து
வந்து அவண் சிந்திய தாதுகள் - இளந்தென்றற் காற்றானது மணம்
பொருந்தி மலர்களிற் படிந்து பூந்தாது உட்கொண்டு வந்து அந் நாட்டில்
உதிர்த்த மகரந்தப்பொடிகள், குன்றின் வீழ் பொன் மழைக் குழு என்ன
- மலைகளின்மேல் பெய்கின்ற பொன்மழைக் கூட்டங்களைப் போல,
முன்றிலும் மணி மாடமும் மொய்க்கும் - முற்றங்களிலும் அழகிய
மாடங்களின்மேலும் நிறைந்து படியும்.
மாடங்களிலும் முற்றங்களிலும் மகரந்தப்பொடி படிதற்கு
மலையில்
பொன் மழை பெய்தலை உவமையாகக் கூறினார். பொன் மழை பெய்தல்
இன்மையின் இல்பொருள் உவமை அணி. மேய்தல்
தென்றலுக்கின்மையின்
இது இலக்கனை. வீழ் பொன் மழை - வினைத் தொகை. குன்றின் வீழ் :
ஐந்தாவதனுருபு ஏழன்பொருளில் வந்த உருபுமயக்கம்.
(55)
|
குறிஞ்சி
நிலத்தில் கிளி கடிதல் |
70. |
உகல
ரும்புனத் திற்கிளி ஓச்சுவார்
அகல்க வண்கொண் டெறியும் அராமணி |
|