|
பகல்வி
ழுங்கணம் ஒப்பன பாரெலாம்
குகன் இருந்த செழுந்தண் குறிஞ்சியே |
. (இ
- ள்.) குகன் இருந்த செழுந்தண் குறிஞ்சி - முருகக்கடவுள்
எழுந்தருளியிருக்கின்ற வளமிகுந்த குளிர்ந்த குறிஞ்சி நிலம் எங்கும், உகல்
அரும் புனத்தில் கிளி ஓச்சுவார் - கெடுதல் இல்லாத தினைப் புனத்தில்
கிளிகளை ஓட்டுகிற குறவர்கள், அகல் கவண் கொண்டு - அகன்ற
கவணைக்கொண்டு, எறியும் அராமணி - வீசுகின்ற நாக மணிகள், பார்
எலாம் விழும் பகல் கணம் ஒப்பன - பூமி எங்கும் பகற் காலத்தில்
வானிலிருந்துவிழும் விண்மீன்களை ஒத்துத் தோன்றின.
கிளி
- குறிஞ்சிநிலப் புள். தினை காத்தல் குறிஞ்சிநிலத்
தொழிலாகும். கிளியை யோட்டுவதற்குக் கல்லாக நாகமணியை எடுத்துக்
கவணில் வைத்து எறிவார் எனவும், அம்மணிகள் பலவிடங்களில்
ஒளியோடு வீழ்வதால் அவை பகலில் விழும் விண்மீன்கள் போலத்
தோன்றும் எனவும் கொள்க.
(56)
|
நெய்தல்
நிலச் சிறப்பு |
71. |
நெடிய
நெய்தலின் நித்தில வண்டலில்
கொடிய காதலிற் கூடல் இழைத்திடும்
கடிய நீலக் கருங்கண் நுளைச்சியர்
மடியி லேறி வளைகண்முத் தீனுமே.
|
(இ
- ள்.) நெடிய நெய்தலின் - பரந்திருக்கின்ற நெய்தல் நிலத்தில்,
நித்தில வண்டலில் - முத்துக்கள் ஒதுங்கிக் கிடக்கின்ற மணல்
மேட்டின்கண், கொடிய காதலின் கூடல் இழைத்திடும் கடிய நீலக்
கருங்கண் நுளைச்சியர் மடியில் ஏறி வளைகள் முத்து ஈனும் - வேட்கை
மிகுதியால் பிரிவாற்றாது இரங்கிக் கூடல் இழைக்கின்ற கூர்மையான
நீலோற்பல மலர்போன்ற கருமைநிறம் பொருந்திய கண்களையுடைய
வலைச்சியர் மடிமேல் ஏறிச் சங்குகள் முத்துக்களை ஈனும்.
கூடலிழைத்தல்
என்பது தலைவியானவள் தலைவனது பிரிவாற்றாது
இரங்கித் தலைவன் வருவானா என்று பார்ப்பதற்குக் கண்ணை மூடிக்
கொண்டு மணலில் விரலினால் வட்டங்கிழித்து வட்டத்தின் தொடக்கமும்
முடிவும் ஒன்றுகூடினால் நாயகன் வந்து கூடுவான் என்று தெரிதல்.
"நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஓடும் மாலினோ டொண்தொடி மாதராள்
மாட நீள்மரு கல்பெரு மான்வரில்
கூடு நீஎன்று கூடல் இழைக்குமே"
என்ற திருநாவுக்கரசு
சுவாமிகள் தேவாரத்தானும்,
"மெய்யில்
அணைத்துருகிப் பைய அகன்றவர்தாம்
மீள்வர் எனக்கருதிக் கூடல் வளைத்தறவே
கையில் அணைத்தமணல் கண்பனி சோர்புனலிற்
கரைய விழுந்தழுவீர் கடைதிறமின்
திறமின்"
என்ற கலிங்கத்துப்
பரணியானும் அறிக.
(57)
|