பக்கம் எண் :


4

     "விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர்வேத விதியல்லர் விண்ணும்
                                                நிலனும்
     திரிதரு வாயுவல்லர் செறிதீயும் அல்லர் தெளிநீரும் அல்லர்"

எனவும் வரும் தேவாரப் பாடல்கள் இக்கருத்தை விளக்கும்.

     'அறுசமயப் பகுதியாகி' என்பதை,

     "அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்
     அவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து"

என்ற திருமுறை வாக்கால் தெளிக.

     'சகளமுமாய்' என்ற சொல். எதுகை நோக்கிச் சகலமுமாய்
என்றாயிற்று. இறைவன் எல்லாப் பொருளும் ஆயினமை முன்னே
கூறினமையில் மீண்டும் சகலமுமாய் என வேண்டுவதில்லை.

     "உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
     அருமேனி அதுவுங் கண்டோம் அருஉரு ஆன போது
     திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தம்
     கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே."

     மூவகைத் திருமேனியும் உயிர்களின் பிறவி நீக்கத்தின்பொருட்டு
முதல்வன் எடுக்கிறான். செழுங்கமலம் : பண்புத்தொகைப்புறத்து பிறந்த
அன்மொழித்தொகை. கமலம் : உவமையாகுபெயர். புக்கேம் :
தன்மைப்பன்மை வினைமுற்று. புகு : பகுதி. ஒற்று இரட்டித்து இறந்தகாலங்
காட்டிற்று. ஆல் : அசை. புகலரிய : வினையெச்சத்து அகரம் தொக்கது.
உபநிடதத்தாய் - உபநிடத்தாய் என மரீஇயிற்று.
                                                     (4)


5. ஆதியாய் அண்டபகி ரண்டத்தும் அப்புறத்தும்
   அடங்கா துற்ற
நீதியாய் மணியொளியும் பாற்சுவையும் எனஅனைத்து
   நிறைந்து நின்றும்
பாதியாய் ஒன்றாகி அருவாகி உருவாகிப்
   பரந்து மல்கும்
சோதியான் முடிசூட்டத் தனதுதிரு வடிசூட்டத்
   துணிந்த தூயோன்.

     (இ - ள்.) ஆதியாய் அண்ட பகிரண்டத்தும் அப்புறத்தும்
அடங்காது உற்ற நீதியாய் - உலகிற்கு முதற் கடவுளாய், இவ்வுலகிலும்
வெளி உலகினும் அவைகளுக்கு அப்பாலும் அடங்காமல் எங்கும் நிறைந்து
நிற்கின்ற முறைமைத்தாய், மணி ஒளியும் பால் சுவையும் என -
மாணிக்கமும் அதன் ஒளியும், பாலும் அதன் சுவையும் பிரிப்பின்றி
ஒன்றாய்க் கலந்திருப்பது போல, அனைத்தும் நிறைந்து நின்றும் - எல்லா
உயிர்களிலும் உலகிலும் இரண்டற்ற தன்மையிற் கலந்து நிறைந்து நின்றும்,
பாதியாய் ஒன்றாகி - சிவமும் சத்தியுமாகக் குணகுணித்தன்மையில் இரு
சம கூறாய் நீக்கமின்றி நின்றும் ஒரே பொருளேயாய், அருவாகி
உருவாகி - தனது சக்தியால்